அம்மாடி!!! ஒரே பிரசவத்துல 4 குழந்தைய பெத்த பாட்டி4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை பெறவுள்ளார்.

370

ஜேர்மனி தலைநகர் பெர்லின் பகுதியில் வசிப்பவர் அன்னிக்ரெட் ரவுனிக்(Annegret Raunigk 65). ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி ஆசிரியரான இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் அவர் மீண்டும் கர்ப்பமானார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக தெரிவித்தனர்.

இது குறித்து அன்னிக்ரெட் கூறுகையில், எனது கடைசி மகள் தம்பி அல்லது தங்கை வேண்டும் என்று விரும்பினாள். இதன் காரணமாகவே நான் குழந்தை பெற்றுகொள்ள சம்மதித்தேன்.

மேலும் என் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று அவருக்கு 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்துல பிறந்தாலும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே இருக்குதுனு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க.

இதன் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை அன்னிக்ரெட் பெறவுள்ளார். மேலும் 65 வயது பாட்டி  ஒரே பிரசவத்துல 4 குழந்தைகள் பெற்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– See more at: http://www.manithan.com/news/20150523115205#sthash.jlxEYU6L.dpuf

SHARE