அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் டாக்டர் விடுவிப்பு

279
அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் டாக்டர் விடுவிப்பு

மேற்காப்பிரிக்காவில் மாலி நாட்டின் அருகேயுள்ள புர்கினா ஃபாஸோ நாட்டில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் கென் எலியாட் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜோசெலின் எலியாட் ஆகியோர் கடந்த 1972-ம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றனர்.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள டிஜிபோ நகரில் கிளினிக் அமைத்து மருத்துவ தொண்டாற்றிவரும் இந்த தம்பதியருக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆகின்றது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15-ம் திகதி இந்த தம்பதியரை அல் கொய்தா ஆதரவு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.

இவர்களில் ஜோசெலின் எலியாட்டை மட்டும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர். அண்டை நாடான நைஜீரியாவின் அதிபர் முஹம்மது இசோபு, நேற்று செய்தியாளர்களின்முன் டாக்டர் ஜோசெலினை அறிமுகப்படுத்தி, அவரது கணவரையும் மீட்பதற்கான முயற்சியில் நைஜீரிய நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

SHARE