ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு!

563

இன்றைய திகதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பன்னாட்டு நிறுவனம். 

           தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த வேகத்தில் திரும்பிச்சென்றுவிட்டன. தாக்குப்பிடித்து நிற்பது யுடிவி மட்டுமே. இங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்து வருகிறது யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு படத்தையும் மிகச் சரியாய் திட்டமிடுவது, திட்டமிட்டபடி செயல்படுவது என்பதில் உறுதியாய் இருந்து வருகிறது யுடிவி. 

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதே இப்போதெல்லாம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. யுடிவி நிறுவனமோ, நான் சிகப்பு மனிதன் படத்தை அடுத்து, விக்ரம் பிரபு நடிக்கும் சிகரம் தொடு, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான், ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் புறம்போக்கு, விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் ஆகிய நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது யுடிவி.

     தயாரிப்பது மட்டுமல்ல, தயாரித்த படங்களை சரியானமுறையில் மார்க்கெட்டிங் செய்து ரிலீஸ் பண்ணுகிறது. தற்போது யுடிவி தயாரித்து வரும் படங்களை கீழ்க்கண்ட ஷெட்யூலின்படி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.  ஜூன் மாதம் சிகரம் தொடு படமும், ஆகஸ்ட் மாதம் அஞ்சான் படமும், அக்டோபர் மாதம் புறம்போக்கு படமும், ஜனவரி மாதம் யட்சன் படமும் யுடிவியின் தயாரிப்பில் வரிசையாக வெளியாக உள்ளன.

SHARE