ஆண்மைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாரா ஹிட்லர்?: சர்ச்சையை கிளப்பும் ஆதாரங்கள்

308

 

ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆண்மைக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமான இவருந்தவர் ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆவார்

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய இவர் ஆண்மைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததற்கான ஆதரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 1923 ஆம் ஆண்டு ஹிட்லருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பான குறிப்பில் அவர் கிரிப்டொர்சிடிஸம் (Cryptorchidism) என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி ஹிட்லர் மிகவும் ஆரோக்கியமான மற்றும் உறுதியான மனிதர் என்று அவரை பரிசோதித்த மருத்துவர் ஜொசப் ஸ்டெயினர் பிரின் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆவணங்கள் கடந்த 2010ஆம் ஆண்டின் போது ஏலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும் பவேரியா பகுதியின் அரசாங்கள் அதனை கைப்பற்றியதாகவும் அதற்கு பின் தற்போது வரை அவை எங்கே உள்ளது என்பது மர்மமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE