ஆல்பி மார்கல் வாய்ப்பு

344

இந்திய அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவின் டேவிட் வைஸ் விலகினார். இவருக்கு பதிலாக ஆல்பி மார்கல் வாய்ப்பு பெற்றார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி அக்டோபர் 2ம் தேதி தரம்சாலாவில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்ரிக்காவின் ‘டுவென்டி–20’ அணியில் வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வைஸ் இடம்பெற்றிருந்தார். இவருக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ‘ஆப்பரேஷன்’ செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு வார ஓய்வும் தேவைப்படுவதால், தொடரிலிருந்து விலகினார். இவருக்குப்பதில் ‘ஆல்–ரவுண்டர்’ ஆல்பி மார்கல் அணியில் இடம் பெற்றுள்ளார்.

SHARE