இங்கிலாந்துக்கு உதவும் டோனி, ஜெயவர்த்தனே! டி20 போட்டியில் இன்று மோதல்

337

இங்கிலாந்து ராணுவத்திற்கு உதவும் வகையில் இந்திய ஒருநாள் போட்டிகளின் அணித்தலைவர் டோனி காட்சி டி20 போட்டியில் விளையாடுகிறார்.

இந்த காட்சி டி20 போட்டி இன்று (வியாழக்கிழமை) லண்டன் கியா ஓவல் மைதானத்தில் ‘கிரிக்கெட் ஃபார் ஹீரோஸ் (Cricket for Heroes)’ என்ற பெயரில் நடக்கிறது.

போரில் காயமடைந்த இங்கிலாந்து ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க இந்த காட்சி டி20 போட்டி நடத்தப்படுகிறது.

இதில் ஹெல்ப் ஃபார் ஹீரோஸ்- உலக லெவன் (Help for Heroes XI- Rest of the World XI) ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

ஸ்டிராஸ் தலைமையிலான ‘ஹெல்ப் பார் ஹீரோஸ்’ அணி சார்பில் டோனி, ஷேவாக், அப்ரிடி, கிப்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலாளராக ஜாம்பவான் இயான் போத்தம் செயல்படுகிறார்.

பிரண்டன் மெக்குல்லம் தலைமையிலான உலக லெவன் அணியில் ஹைடன், ஜெயவர்த்தனே, லாரா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலாளராக கவாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான் மற்றும் அமைச்சர்கள் சேர்ந்து டோனி உள்ளிட்ட வீரர்களுக்கு விருந்து அளித்து கவுரவிக்கின்றனர்.

SHARE