இங்கிலாந்துடன் சேர்த்து நடையை கட்டிய கத்துக்குட்டி அணிகள்

412
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கியது.இதில் பங்கேற்ற 14 நாடுகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

இந்த ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

அதன் படி ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் காலிறுதியில் நுழைந்தன.

‘பி’ பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய 3 அணிகளில் இருந்து இரண்டு நாடுகள் காலிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் இன்றைய லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் மேற்கிந்திய தீவுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியும், பாகிஸ்தான் அயர்லாந்து அணியை வீழ்த்தியும் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் வெளியேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து காலிறுதிப் போட்டி வருகின்ற 18ம் திகதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

SHARE