இங்கிலாந்து அணியுடன் மோதல்: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இணைந்த பாவத் ஆலம்

354

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருக்கிறது.

டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் 13ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரையும், ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 11ம் திகதி முதல் 20ம் திகதி வரையும், டி20 தொடர் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரையும் நடைபெற இருக்கிறது.

இதில், 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாவத் ஆலம் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

டெஸ்ட் அணி:

அகமது ஷெஜாத், ஷான் மசூத், அசார் அலி, முகமது ஹபீஸ், பாவத் ஆலம், ஆசாத் ஷாபிக், மிஸ்பா, யூனிஸ் கான், சர்பராஸ் அகமது, யாசிர் ஷா, ஜல்பிகர் பாபர், வகாப் ரியாஸ், இம்ரான் கான், ரகாத் அலி, ஜூனாயத் கான்.

ஒருநாள் அணி:

அசார் அலி (அணித்தலைவர்), அகமது ஷெஜாத், முகமது ஹபீஸ், யோசிப் மக்சூத், கோயிப் மாலிக், பாபர் ஆசம், ஆசாத் ஷபிக், சர்பராஸ் அகமது, முகமது ரிஸ்வான், இமாத் வாசிம், அன்வர்அலி, வகாப் ரியாஸ், யாசிர் ஷா, ராகத் அலி, முகமது இர்பான்.

டி20 அணி:

அகமது ஷெஜாத், முக்தார் அகமது, உமர் அக்மல், முகமது ஹபீஸ், ஷாகித் அப்ரிடி (அணித்தலைவர்), சோயிப் மக்சூத், யோசிப் மாலிக், ஆமர் யாமின், முகமது இர்பான், பிலால் ஆசிப், வகாப் ரியாஸ், இமாத் வாசிம், சோகைல் தன்வீர், முகமது ரிஸ்வான், இம்ரான் கான் ஜூனியர்.

SHARE