இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார்

337

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆடுகளத்தில் எவ்வளவு வேகமாக பந்து வீசப்பட்டாலும் அதை மிகவும் தைரியமாக எதிர்த்து ஆடக் கூடியவர் எனும் பெயரை அவர் பெற்றிருந்தார் மிக இளவயதில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியவர் எனும் பெருமையும் அவரையே சாரும்.

glose 78787w

அவர் 1949அம் ஆண்டு 18 வயதானபோது நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். ஆடுகளத்தில் மிகவும் துணிச்சலானவர் க்ளோஸ் முன்னாள் நடுவர் டிக்கி பர்ட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 22 போட்டிளில் விளையாடியுள்ள பிரெயின் க்ளோஸ் மிகவும் தைரியமாக ஆடக் கூடிய ஒரு விளையாட்டு வீரராக இருந்தார் என்றும் எக்காலத்திலும் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரராகவே பார்க்கப்படுவார் என்றும் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பர்ட் கூறியுள்ளார்.

ஆடுகளத்தில் மிகவும் துணிச்சலாக ஆடியவர் க்ளோஸ் என்றும் டிக்கி பர்ட் தனது புகழஞ்சலியில் தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற பிரெயின் க்ளோஸ் இங்கிலாந்தின் யார்க்க்ஷைர் மற்றும் சோமர்செட் அணிகளுக்காக விளையாடி அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.

மட்டை வீசும் விளையாட்டு வீரரிடமிருந்து ஒரு முழ தூரத்தில், ஷார்ட் லெக் எனும் இடத்தில் நின்று ஃபீல்டிங் செய்த அவர், அப்போது பந்து அவரைத் தாக்கினாலும் அதனால் அரசாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்துவார் என்றும் டிக்கி பர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டம் உலகப் போருக்கு பிறகு யார்க்க்ஷையர் அணிக்கு தலைமை ஏற்றிருந்தவர்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தவர் அவர். அந்த அணி அவர் தலைமையில் நான்கு முறை கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது. கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகவும் அவர் பார்க்கப்படுவார் என டிக்கி பர்ட் தெரிவித்துள்ளார்.

விகிதாச்சாரங்களின் அடிப்படையிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது மிக அதிக அளவுக்கு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்துக்காக வென்றவர் எனும் பெருமையும் மறைந்த பிரெயின் க்ளோஸுக்கு உண்டு. 1966-67 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியின் தலைவராக அவர் இருந்தபோது அவர் ஆறு போட்டிகளில் வெற்றிகளை ஈட்டினார்.

அவர் தலைமையில் இங்கிலாந்து ஆடிய இதர ஏழு போட்டிகள் எத்தரப்புக்கும் வெற்றியின்றி முடிவடைந்தன. இடதுகை ஆட்டக்காரரான அவர் 1976ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மிகவும் அச்சுறுத்தும் வகையில் மைக்கேல் ஹோல்டிங் வீசிய பந்துகளை எதிர்கொண்டு உடல் முழுவதும் பந்தால் அடிப்பட்டாலும் தொடர்ந்து ஆடியதற்காக மிகவும் அறியப்படுகிறார்.

SHARE