இங்கிலாந்தை தோற்கடிப்போம்: வக்கார் யூனிஸ் நம்பிக்கை

357
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் மட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீதும் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம்.

கடந்தாண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதை போன்று இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெறுவோம்.

இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடராகும். யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், அசார் அலி ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள சதங்களை கணக்கிட்டால் எங்கள் அணி சிறப்பாக ஆடும் என நினைக்கிறேன்.

2012ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது போன்று இந்த தொடரையும் வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

SHARE