இதுல உங்க கனவுக்கன்னி எங்க பிறந்தாங்கனு பார்ப்போமா?…

282

2013-ஆம் ஆண்டு கடந்து போனாலும் அந்த ஆண்டின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த நடிகைகள் இன்றும் நம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுதான் உள்ளனர்.

இதில் குறிப்பாக தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் முன்பு மும்பை ஹீரோயின்களின் வரவு போல இன்று கேரள ஹீரோயின்கள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதேபோல ஹிந்தி திரையுலகில் தென்றல் காற்றாய் புகுந்த சில ஹீரோயின்கள் இளைஞர்கள் மனதில் இப்போது புயலாய் வீசிக்கொண்டு உள்ளனர். அந்த வகையில் 2013-ஆம் ஆண்டு பல இளைஞர்களின் கனவுக்கன்னிகளாக திகழ்ந்த ஹீரோயின்களின் பிறந்த இடங்களை பார்ப்போம்.

சமந்தா, சென்னை

தமிழ் நாட்டின் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை எல்லா ஆண்களையும் ஜொள்ளுப் பேர்விழிகளாக மாற்றியவர் சமந்தா. இந்த அழகு தேவதையின் பிறந்த இடம் வேற எதுவும் இல்லைங்க…நம்ம சென்னைதான்!

நயன்தாரா, பெங்களூர்

தமிழ் சினிமாவின் கிசு கிசு ராணியென்றே இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கப்பட்ட நடிகை நயன்தாரா வளர்ந்தது என்னவோ கேரளாவின் திருவல்லா என்றாலும் பிறந்தது பெங்களூரில்தான்.

நஸ்ரியா, திருவனந்தபுரம்

2013-ஆம் ஆண்டு பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கோலிவுட்டின் குட்டி தேவதை நஸ்ரியா. இவங்க பொறந்தது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம். இவை பிரபல சுற்றுலாதளமாகும்.

ஹன்ஷிகா மோத்வாணி, மும்பை

சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்ஷிகா மோத்வாணி பிறந்தது மகாராஷ்டிர தலைநகர் மும்பையில்.

அமலா பால், எர்ணாகுளம்

சிந்து சமவெளியில் கொஞ்சம் சறுக்கினாலும் தொடர்ந்து ஆர்யா, விக்ரம், சித்தார்த், விஜய் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஆகிவிட்டார். இந்தத் தலைவாவின் தலைவி பிறந்த இடம் கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரில்.

அனுஷ்கா ஷெட்டி, மங்களூர்

அருந்ததியா நம்மை பயமுறித்தினாலும் சூர்யாவின் சிங்கம் படத்தில் கூலாக நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. இந்த தெய்வத்திருமகள் பிறந்த இடம் கர்நாடக மாநிலம் மங்களூரில்.

லக்ஷ்மி மேனன், கொச்சி

முதல் படம் கும்கியா இருந்தாலும் சுந்தரபாண்டியன் படம் மூலமா நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுங்கற இமேஜோட நிறைய பேரு மனசுல லக்ஷ்மி மேனன் இடம் பிடிச்சிட்டாங்க. இவங்க பொறந்த இடம் கேரள மாநிலம் கொச்சி நகரில்.

பிரியங்கா சோப்ரா, ஜம்ஷெட்பூர்

நம்ம இளைய தளபதியின் தமிழன் படத்தில் அறிமுகமானாலும் இன்று பிரியங்கா சோப்ரா ஹிந்தி திரையுலகின் டாப் கதாநாயகர்களில் ஒருவர். இவர் பிறந்த இடம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் நகரத்தில்.

சோனாக்ஷி சின்ஹா, பாட்னா

சல்vமான் கானின் இமாலய வெற்றிபெற்ற படமான ‘தபாங்’ படத்தின் கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா. இவvர் ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளாக பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்தார்.

பரினீத்தி சோப்ரா, அம்பாலா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்று விட்ட தங்கையான பரினீத்தி சோப்ரா இன்றைய மாடர்ன் யூத்களின் ஹாட் ஃபேவரைட். இந்த பூவுலக தேவதை பிறந்த இடம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான அம்பாலாவில்.

 

SHARE