பதுளையில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

422

பதுளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

பதுளையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜன்னல்களை உடைத்தல், சொத்துக்களுக்கு சிறு சேதங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பதுளை பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை,  பதுளையில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி ஒன்றின் போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்கள இளைஞரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குழு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதல் இரண்டு இன சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடாக உருவாக்க சில தரப்பினர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம்கள் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டுமென பதுளை பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பதுளை நிலைமைகள் குறித்து சில முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளனர்.

நாளை ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.tamilwin.net/show-RUmsyJSdKVmq3.html#sthash.EKymr1Ps.dpuf

SHARE