இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள் இன்றாகும்!

361

 

இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும்.உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் – இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர்.

அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று மாலை விரைவாகவே சூரியன் அஸ்தமனமாகிவிடும்.

பிலிப்பைன்ஸ் உட்பட பூமியின் வடக்கு பகுதிக்கு அருகே உள்ள நாடுகளில் வெறும் 10 மணிநேரத்துக்கு குறைவாகவே இருக்கும்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், பழங்காலத்தில் நீண்ட பகல் மற்றும் குறுகிய பகல் கொண்ட நாட்கள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தின, ஆனால் தற்போது விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் இந்த மாறுதல் மக்களால் ரசிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

SHARE