இந்தியாவிடம் கெஞ்ச வேண்டாம்: கொந்தளித்த ஷாகித் அப்டிரி

334
இந்தியா அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாட நாம் ஏன் அவர்களிடம் கெஞ்ச வேண்டும்? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்டிரி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 2015- 2023ம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்து விட்டது.

மேலும், இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும் தான் உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இருப்பினும் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த தொடர்ந்து யோசித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிடம் எதற்கு கெஞ்ச வேண்டும் என்று பாகிஸ்தானின் டி20 போட்டி அணித்தலைவர் அப்டிரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அவர்களுக்கு நம்முடன் விளையாட விருப்பமில்லாத நிலையில் நாம் மட்டும் ஏன் அவர்களுடன் விளையாட ஆர்வம் காட்ட வேண்டும்.

இந்தியா நம்முடன் விளையாடவில்லை என்றால் என்ன? பிற நாட்டு அணிகளை அழைத்து விளையாட வைப்போம்” என்று கூறியுள்ளார்.

SHARE