இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி தொடங்க இருக்கிறது.

323

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இதில் யார் டாப் ஆர்டரில் களம் இறங்க இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதே கேள்வி தோனியிடம் வைக்கப்பட்டது. அப்போதும் நானும் டாப் ஆர்டரில்தான் விளையாட இருக்கிறேன். ஆனால், எந்த இடத்தில் இறங்குவேன் என்பதை கூறாமல் தட்டிக்கழித்து வி்ட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நிலையில் விளையாடினால் பொறுத்தமாக இருக்கும் என்று நாம் கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பாக நாம் டி20 போட்டியில், நம்முடைய அணியை பார்த்தால், ஐ.பி.எல். சீசனில் பெரும்பாலான வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆனால், சர்வதேச  டி20 போட்டிக்கு வரும்போது அவர்களின் பேட்டிங் நிலை மாறுபடும்.

எடுத்துக்காட்டாக, ரகானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ஆனால், இந்திய அணியின் டி20 போட்டியில் நடுநிலை வீரராக களம் இறங்குகிறார். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் நான் எந்த நிலையில் இறங்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன்.

பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் விளையாட விரும்புகிறாரக்ள். ஆனால், அவர்கள் மிடில் மற்றும் அதற்கு கீழும் இறக்கப்படலாம்’’ என்றார்.

SHARE