இந்தியா- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் நிகழப் போகும் 7 சாதனைகள் இதுதான்!

320

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் நடக்கவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை அரங்கேற உள்ளன. இதைப் பற்றி பார்க்கலாம்.

1.டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள்:-

டி20, ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பிய டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியிலும் அதிரடி காட்டினால் அவர் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

தற்போது 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள டிவில்லியர்ஸ் 7606 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

2.ஹசிம் அம்லா 7000 ஓட்டங்கள்:-

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா 142 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 6770 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதனால் இவரும் 7000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்பு இருக்கிறது.

3. விராட் கோஹ்லி 3000 ஓட்டங்கள்:-

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 206 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள கோஹ்லி, தற்போது 2794 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

4. அஸ்வின் அதிவேக150 விக்கெட்டுகள்:-

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் குறைந்த இன்னிங்சில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

தற்போது அஸ்வின் 28 போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். முன்னதாக முன்னாள் இந்திய வீரர் எரபல்லி பிரசன்னா 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

5. உமேஷ், தாகிர் 50 விக்கெட்டுகள்:-

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் (48 விக்கெட்), தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் (43 விக்கெட்) ஆகியோர் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளனர்.

6.துணை கண்டத்தில் டேல் ஸ்டெய்ன் 100 விக்கெட்டுகள்:-

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் (90 விக்கெட்டுகள்) துணை கண்டத்தில் 100 விக்கெட் வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

7. இந்திய அணியின் கோட்டை:-

கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் டெல்லி பிரோஸ் ஷா கோட்லா மைதானம் இந்திய அணியின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்திய அணியை இந்த மைதானத்தில் வெற்றி பெறுவது எளிதல்ல.

கடந்த 1987ம் ஆண்டு இந்தியாவை மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது. அதன் பிறகு 28 ஆண்டுகளாக இந்தியாவே அந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த சாதனையை தகர்க்க தென் ஆப்பிரிக்க அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

SHARE