இந்திய அணிக்குள் ஆரோக்கியமான போட்டி உள்ளது: முரளி விஜய்

334
அயல்நாட்டு தொடர்களின் மூலம் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டோன் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.பிரபல கிரிக்கெட் இணையதளத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அளித்த பேட்டியில்,  அயல்நாட்டு தொடர்கள் எங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய சிந்தனை அனைத்தும் ஒன்றாக இருப்பதால், தோல்வி ஏற்பட்டாலும் சூழ்நிலையில் எந்தவித மாற்றமும் இருந்ததில்லை.

எதுவாக இருப்பினும் அடுத்த நொடியிலிருந்து ஆட்டத்தின் போக்கை நம்பக்கம் திருப்ப முடியும் என்ற மனநிலையை பெற்றுள்ளோம்.

இவ்வாறாக அயல்நாட்டுத் தொடர்கள் சில நல்ல விஷயங்களை எங்களுக்கு அளித்தது.

அதுமட்டுமல்லாமல் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருப்பதால், பொறாமை ஒரு போதும் இருந்ததில்லை.

உதாரணத்திற்கு ஷிகர் தவான் ஓட்டங்கள் குவித்தால் நான் பாராட்டுகிறேன், அவரும் அதையே எனக்கு திரும்ப வழங்குகிறார்.

ஓய்வறையில் நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மைதானத்தில் நான் சிறப்பாகச் செயல்பட முடியும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தென் ஆப்பிரிக்க தொடரை உற்சாகத்துடன் எதிர்நோக்கி வருவதாகவும், உடல் தகுதியில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE