இந்திய அணியின் தலைவராக கலக்கும் விராட் கோஹ்லி: சொல்கிறார் சனத் ஜெயசூரியா

328
இந்திய அணியின் புதிய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் நல்ல தலைமைத்துவ திறமைகள் உள்ளதாக என்று முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.இந்நிலையில் ஓய்வு பெற்ற சங்கக்காரா பற்றி முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா கூறுகையில், “சங்கக்காரா, டில்ஷான், ஜெயவர்த்தனே போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பது கடினம்.பெரிய வீரர்கள் ஓய்வு பெறும்போது இளம் தலைமுறையினரிடம் நாம் நம்பிக்கை வைப்பது அவசியம். சந்திமால், மேத்யூஸ், திரிமன்னே ஆகியோர் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் பற்றி கூறுகையில், “இரு அணிகளுமே தரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரின் முடிவுகள் கணிக்கக் கடினமானவை. விராட் கோஹ்லி நன்றாக தலைமை வகிக்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வார். அவரிடம் நல்ல தலைமைத்துவ திறமைகள் உள்ளதாக தெரிகிறது.

அதே போல் 5 பந்துவீச்சாளர்கள் கோட்பாடு சூழ்நிலையைப் பொறுத்து அமையும், விராட் கோஹ்லி அதற்கு ஏற்றவாறே விளையாடுகிறார்” என்று கூறியுள்ளார்.

SHARE