இந்திய அணியில் உள்ள பிரச்சனை! டோனியிடம் அடம் பிடித்தாரா கோஹ்லி?

295

வளைந்து கொடுக்காத தன்மையுடன் அணியின் துடுப்பாட்ட வரிசை இருப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி குற்றம் சாட்டியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத ரஹானே, ஒருநாள் தொடரில் கோஹ்லியின் இடமான 3வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் அணியின் துடுப்பாட்ட வரிசை மாற்றியமைக்கப்பட்டது. சிறப்பாக ஆடிவந்த ரஹானே 3வது வரிசையில் களமிறங்கவில்லை.

வழக்கம் போல் கோஹ்லி 3வது வரிசையில் களமிறங்கி ஆடினார். ஆனால் பின் வரிசையில் களமிறங்கிய ரஹானேவால் கடைசியில் சொபிக்க முடியவில்லை.

இதனால் டோனியிடம் கோஹ்லி, ’நான் எனது இடமான 3வது இடத்தில் தான் ஆடுவேன் என்று அடம் பிடித்திருப்பார்’ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

டோனி கூறுகையில், “இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை வளைந்து கொடுக்காத தன்மையில் சிக்கியுள்ளதாக நான் நினைக்கிறேன்.

இதுதான் எனது ‘பேட்டிங் ஆர்டர்’. இதில் தான் நான் களமிறங்குவேன் என்ற விறைப்பு உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு வேளை அவர் கோஹ்லியை பற்றி தான் கூறுகிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

மேலும், கோஹ்லியின் இடம் தொடர்பாக அவர் கூறுகையில், “விராட் கோஹ்லியை 3ம் நிலையில் இறங்க விரும்புகிறோம், சில வேளைகளில் 4ம் நிலையில் அவர் களமிறங்குவதை நாங்கள் விரும்புகிறோம்.

வழக்கமாக, 4ம் நிலை வீரர்களுக்கு 30 ஓவர்கள் கிடைக்கும். 30 ஓவர்கள் என்பது சதம் எடுக்க சிறந்ததொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் அணியில் ஒரு ஆழத்தன்மையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்

SHARE