இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

446

 

LG GUARDIAN

mahindha_sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊகுகுழல் இணையம் மத்திரிபால சிரிசேனவின் பேச்சுக்களால் கூட்டமைப்பு விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது, இலங்கை அரசியல் யாப்பை மையமாகக் கொண்டு தமிழர்களின் உரிமையை ஒற்றையாட்சி முறை ஊடாகவே பெற்றுக்கொள்ளலாம் என நம்பும் வாக்குக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் யாருக்கு என முடிவெடுக்கவில்லை என்பதையே தெரிவித்து வருகின்றது.

ஒடுக்கபடும் தேசிய இனம் ஒன்றைப் பிரதுநிதித்துவம் செய்வதாகக் கூறும் கூட்டமைப்பு மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்குப் பதிலாக பாராளுமன்றத்திற்குச் செல்ல வாக்குப் பொறுக்குவதையே ஒரே வழிமுறை எனக் கூறுகிறது. இலங்கையில் இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க முடியாது என வெளிப்படையாகக் கூறுவதற்கே கூட்டமைப்பு தயக்கம் காட்டுவது சந்தேகத்திற்குரியதே.

இந்த நிலையில் மைத்திரிபாலவின் பேச்சுக்கள் விரக்தியளிப்பதாகக் கூறுகிறது. அதில் சந்தேகம் இல்லை எனினும், மகிந்தவின் பேச்சுக்களால் மகிழ்ந்துவிட்டார்களா என்பதே கேள்வி.

 

SHARE