இனப்படுகொலை அன்று மட்டும் நடக்கவில்லை. மஹிந்த ராஜபக்­ அரசு இருக்கும் வரை இலங்கையில் அரங்கேற்றப் பட்டு வந்தது.

227

 

  பேரினவாத சிங்கள இன வாதிகளினால் தமிழர்களின் உரிமை, உடைமை, உயிர்  எனச் சூறையாடி  தமிழர்வாழ் வில் தீராதப்பெருவலியை ஏற்படுத்திய  அந்த 23.7. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப்படுகொலை அரங்கேறிய ஞாபகாத்த நாள் எதிர் வரும் 23 ஆம் திகதியுடன் 32  ஆண்டுகள் கடந்துச் செல்லவுள்ளது.

images

ஈழத் தீவில் காலங்காலமாக வாழ்ந்துவந்தத் தமிழர்களும், தமிழ்நாட்டிலிருந்து தோட்டத்துறைக்கு ஆங்கிலேயரினால் அழைத்துவரப்பட்டத் தமிழர்களையும் சிங்களக் காடையர் கள் கொத்துக்கொத்தாகக் கொன் றொழித்த  1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையை எத்தனையாண்டுகள் ஆனாலும், தமிழர்கள்   மறக்கப் போவதுமில்லை அத்துடன் அந்தக் கறுப்பு சுவடுகளின் நினைவலைகள் ஓயப் போவதுமில்லை.

ஈழ மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை சிங்களப் பேரினவாத அரசிடம் கேட்டு மன்றாடியத் தமிழர்களுக்கு சிங்கள இனவெறிக் காடை யர்களால் கட்டவிழ்த்துவிட்ட அந்த  இனப்படுகொலையின் ஆறாத கறுப்புவடுகளை ஈழத் தேசமும், மலையக மண்ணும் தம் உரிமை கிடைக்கும் வரை மறக்கக்கூடாது.

தமது வாழ்வில் வளம் சேர்க்க முனைந்தது தவறா? அல்லது பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் இன,மத, மொழி சமத்துவம் கேட்டது தவறா? இல்லாவிடின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவு களைத் தாங்களே மேற்கொள்ள முயன்றது தவறா? அன்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் வராமல் சர்வதேச நியதிகளின் படி தமக்குச் சுயநிர்ணய உரி மைக் கோரியதுதான் தவறா?

இவையனைத்தக்கும் முட்டுக் கட்டை போட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனவாதத் தின் கோரத்தாண்டவத்தை யும், அடக்குமுறையினையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் விடுதலைப் புலிகள்  இராணுவத்தினர் மீது அதிருப் தியடைந்தனர். அதன் விளை வாக இராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க எண்ணினர்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி பலாலி இராணுவ முகாமிலிருந்து 15 இராணுவச் சிப்பாய்கள் ரோந்து நடவடிக்கைக்காகப் புறப்பட் டனர்.  அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் இருண்டப் பகுதியாகக் காணப்பட்ட திருநெல்வேலியில் தபால் பெட்டி சந்திக்கு முன் பதுங்கி யிருந்த விடுதலைப் புலிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை   தாக்கினர்.
சம்பவம் இடம்பெற்ற அந்த இடத்தி லேயே 13 இராணுவச் சிப்பாய்கள் மரணித்தனர். இருவர் மாத்திரம் தப்பிச்சென்றனர்.
இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரளை யில் உள்ள கனத்தையில் இறுதிக் கிரியைகளை செய்வதற்கு அப்போதைய ஜே.ஆர் ஜெயவர்தன அரசு  நடவடிக்கை யயடுத்திருந்தது.
இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின் னர் இந்தப் பதற்றம் பாரிய இனக்கலவரமாக மாற வழிவகுத்தது.

சிங்கள இனவெறியர்கள் மத்தி யில் இந்த விடயம் தீவிரமாக ஒரு சில விசமிகளால் நாடு முழுவதும் பரப்பப்பட்டது. அதாவது, யாழ்ப் பாணத்தில் பெளத்தப் பிக்கு ஒரு வரை உயிரோடு எரித்துவிட்டார் கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகள் வந்துவிட்டார்கள் என்றும் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியை யடுத்து, கொழும்பு நகரிலும்  நாட்டின் ஏனையப் பல நகரங்களுக் கும் மிகத் தீவிரமாக கலவரங்கள் பரவின.
அதன் எதிரொலியாகத் தமிழர் களின் வீடுகள், கடைகள், உடை மைகள் என அனைத்தும் சூறையா டப்பட்டன. தமிழர்கள் பலர் உயி ரோடு கொளுத்தப்பட்டனர்.

நுவரெலியாவில் ஆரம்பித்தக் கலவரம் மலையகமெங்கும் பசு மைக்கோலத்தை மாற்றி பிணக் கோலமாக்கியது. கண்டி, கேகாலை, கம்பளை, இரத்தினபுரி என மலை யகத்தின் மூளை முடுக்கெங்கும் இனப்படுகொலைகள் சிங்கள இன வெறியர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டது.
மலையக மக்களுக்கே இப்படி யயாரு நிலையயன்றால்,அந்தக் காலகட்டத்தில் தமிழரின்  சுயநிர் ணயத்துக்காகப் போராடிய  வடக்கு, கிழக்குத் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்குமென்பதை நாம் நன்கு உணர முடியும்.

உலக வரலாற்றிலே சிறை வாசம் அனுபவித்தவர்கள் மீது இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப் பட்டதென்றால் அந்தப் பெருமை அன்று இலங்கையை ஆண்ட ஜே.ஆர். அரசையே சாரும். 1983 ஜுலை கலவரம், உலகம் காணாத இரண்டு கொடூர சம்பவங்களைக் கொண்டிருந்தது.
ஒன்று, வெலிக்கடைச் சிறை யில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டவிதம். இரண்டாவது,  நடைபெற்ற படு கொலைகள் குறித்து  ஜனாதிபதியாகவிருந்த ஜெயவர்த்தன வெளியிட்டக்கருத்து.

வெலிக்கடைச்சிறையில் இருந்த சிங்களக்காடையர்கள் பலருக்கு 1983 ஜுலை 25 ஆம் திகதி, இரும்புத்தடி, உருட்டுக் கட்டை, கத்தி போன்ற கொடிய ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அவர் களுக்கு ஒதுக்கப்பட்டபணி ஒன்றே யயான்றுதான். சிறையிலிருக்கும் தமிழ் கைதிகளை அடித்து சித்திர வதைச் செய்து கொலைசெய்ய வேண்டுமென்பதே அந்தப் பணி.
அதனை அவர்கள் எதிர்பார்த் ததற்கும் மேலாகவே செய்து முடித்த னர். அச்சத்தில் உறைந்து போய், ஒருமூலையில் ஒடுங்கிக் கிடந்த மயில்வாகனன் என்னும் 19 வயது இளைஞனை வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.

வெறுமனே கொலை செய்வது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு சித்திரவதைகளுக்கு  உள்ளாக்கி ஒருவனைக் கொல்வதுதென்பதே அன்று நிகழ்ந்த கொடூரங்களின் கொடூரம். சிறையிலிருந்த மா வீரன் குட்டிமணி, நீதிமன்றத் தில் ஒரு முறை நான் இறந்த பிறகு என் கண்களை இரண்டு தமிழர் களுக்குப் பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழ் ஈழத்தை என் கண்கள் காணட்டும்” என்று கூறி னார்.

அவர் கூறிய அந்தக் கருத்து மாபெரும் தேசத்துரோகக் குற்ற மெனக் கருதி குட்டிமணியின் கண் கள் இரண்டையும் தோண்டித் தரையில் போட்டு காலால் மிதித்த னர். கண்களிலிருந்து இரத்தம் கொட்டும் காட்சியைக் கண்டு ரசித் தனர். துடிக்கத் துடிக்கக் குட்டி மணியை சிங்களக் காடை யர்கள் சித்திரவதை செய்துக்கொன்றனர்.

இப்படி அந்தசிறை முழுவதும் 35 பிணங்கள் சிதறிக் கிடந்தன. அத்தனை கொடுமைகளுக்குப் பின்பு, அன்று நாட்டின் அதிபராக விருந்த ஜெயவர்த்தன அளித்தப் பேட்டியின் சிலவரிகள் கீழே (இன்று சிங்களவர்களுக்கு குடைபிடிக்கும் தமிழர்களுக்காக,) :-
இப்போது யாழ்ப்பாணத்தவர் களின் எத்தகைய அபிப்பிராயத் தைப் பற்றியும் எனக்குக் கவலை யில்லை. அவர்களைப் பற்றி இப் போது நாங்கள் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி யும் கவலையில்லை.”
தன் சொந்தநாட்டு மக்களைப் பற்றியும், அவர்கள் கொல்லப்படு வதைப் பற்றியும், ஓர் இனமே அழிக்கப்படுவதைப் பற்றியும் அந்த நாட்டின் ஜனாதிபதி கவலைப்பட வில்லை. ஆனால், அந்த நாட்டின் இறையாண்மை பற்றியும், அந்த நாடு உடைந்துவிடக்கூடாது என்பது பற்றியும் இங்கு எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள்.
1983 இல் நடந்தது வெறும் கலவரம் அன்று. அது உள்நாட்டுப் போரின் தொடக்கம். இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்வதில் ஏற்பட்டுவிட்ட முடிவு. அன்று சிறை யில் சிதறி விழுந்தவை குட்டிமணி யின் கண்கள் அல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமைப் போராட்டத் தின் தொடக்கம்.

சிங்கள, இனவெறிக் காடையர் களின் தமிழ் இனப்படுகொலையின் ஊழித்தாண்டவமாடி 32  ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ் வில் எத்தனை நாட்கள் கடந்துபோனாலும் இந்த நாளை மறக்க முடியாது.மறக்கவும் கூடாது. நம் தமிழ் உறவுகளின் சுதந்திர வாழ்வை அடியோடு மாற்றிய நாள்,  அவர்களின் ஜனநாயக குரல்வளை கள் நெறிக்கப்பட்ட நாள், சுதந்திரக் காற்று நசுக்கப்பட்ட நாள்,  ஈழ மண்ணிலும், மலையக மண்ணிலும் தமிழர்களின் குருதி யாறு ஓடிய தீராப் பெருவலியின் கறுமைப்படிந்த கரிநாள்,  எம் சுதந்திரப் போரட்டத்துக்கு ஆயுதத் தை ஏற்தவைத்த நாள்,   65 ஆயிரம்  தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட அதியுச்ச இனப்படு கொலை நாள்.

இத்தகைய, இனப்படுகொலை அன்று மட்டும் நடக்கவில்லை. அதன் பின்னர் வந்த ஒவ்வொறு நாளும் அதாவது கடையியாக மஹிந்த ராஜபக்­ அரசு இருக்கும் வரை இலங்கையில் அரங்கேற்றப் பட்டு வந்தது.
இனப்படுகொலையின் உச்சத்தை தொட்டுள்ள சிங்கள இனவாதிகளிட மிருந்து தமிழர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்நாள் வரும் வரை சிங்கள இனவாதிக்களுக்குப் பயந்தோமென்றப் பதம் எம்மினத் தின் அடுத்த சந்ததியினருக்கும் விதைத்துவிடக் கூடாது. தமிழர் விடுதலையடையும்வரை தமிழர் களின் உரிமைப் போராட்டம் அடங்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை

இனப்படுகொலை அன்று மட்டும் நடக்கவில்லை.  மஹிந்த ராஜபக்­ அரசு இருக்கும் வரை இலங்கையில் அரங்கேற்றப் பட்டு வந்தது.
SHARE