நீண்ட காலத்திற்கு பின் முல்லைமாவட்ட இணைப்புகுழு கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்களிப்புடன் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட்பதியுதீன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காதர் மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர் மேற்படி நிகழ்வில் திணைக்களம் சார்பாக வௌ;வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்ட இந்நிகழ்வு மிகவும் காரசாரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
thinappuyalnews.comமக்கள் வெள்ளம் குழுமிநிக்க முல்லை மாவட்ட இணைப்புகுழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
Posted by Thinappuyalnews on Thursday, 28 January 2016
thinappuyalnews.comமக்கள் வெள்ளம் குழுமிநிக்க முல்லை மாவட்ட இணைப்புகுழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
Posted by Thinappuyalnews on Thursday, 28 January 2016
முக்கிய விடயங்களாக இராணுவத்தால் அபகரிக்கபட்ட காணி விடயங்கள் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் தமிழ் முஸ்லீங்கள் மீள்குடியேற்ற விடயங்கள் கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் நேரடி சவால்கள் சம்மந்தமான விடயங்கள் ஆறுதலாக ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன. இக் கூட்டத்தில் வன்னிமாவட்ட பராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அமைச்சரும் இணைத்தலைவருமான றிசாட்பதியுதீன் ஆகியோர் அதி கூடிய கரிசனையுடன் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்கள். இக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் அரச திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.