இறந்துபோனவர்களின் அஸ்தியை தூவுவதற்கு கட்டுப்பாடு

601
இறந்துபோனவர்களின் அஸ்தியை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தூவுவதை கட்டுப்படுத்த கனடாவின் கியூபெக் மாகாணம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களின் பாசத்துக்குரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் அஸ்தியை நியாபகார்த்தமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் தாங்கள் சுற்றித்திரிந்த இடத்திலும் தூவுவது பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கனடாவின் கியூபெக் மாகாணம் இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்லறை மற்றும் கோலம்பரியம்(சாம்பல் வைக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடம்) ஆகிய இடங்களில் மட்டுமே சாம்பலை வைக்க வேண்டும் என்று சில மத அமைப்புகள் மற்றும் சடங்கு  அமைப்புகள் கூறிவருகின்றன.

எனினும் அப்பகுதியை சேர்ந்த 70 சதவீதம் பேர், இறப்பதுக்கு முன் தங்கள் உறவினர்கள் கூறிய இடத்திலேயே அவர்களின் அஸ்தியை தூவுகின்றனர்.

இதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சியடையும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இது தொடர்பாக மௌரின் ரொவ் என்ற் பெண்மணி கூறியதாவது, எனது கணவரின் அஸ்தியை எங்களின் தோட்டத்திலும், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்ட பாதைகளிலும் தூவுகிறேன்.

இதன் மூலம் அவர் என்னும் நெருக்கத்தில் உள்ளதாக எண்ணம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் புதிய சட்டம் இந்த நெருக்கத்தை பிரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE