இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை

337

 

இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச

மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை ^2016-

10806413_10152985059136327_3114651442318091324_n-720x480

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இரண்டு

விடயங்கள் பற்றி உரை நிகழ்த்துவது பொருத்தமென நான் முடிவுசெய்தேன். அதற்கமைய மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி

குமாரசுவாமி மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் உரை நிகழ்த்துவதற்கு பொருத்தமானவர்களென நான்

தீர்மானித்தேன்.

அபிவிருத்திச் சவால்கள் பற்றி மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிட்ட விடயங்களில் தற்போதைய பொருளாதார

பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டது.

அதுபற்றி நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். புதியதோர் அபிவிருத்திச் சட்டகம் பற்றி அவர் யோசனை தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக இந்த நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக பின்னூட்டல் மற்றும் ஆய்வு

மேற்கொள்ளப்படும் போது ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தாது தாம் பொறுப்பேற்ற பணிகளை உரியவாறு நிறைவேற்ற

வேண்டுமென்பதே எனது நம்பிக்கை ஆகும்.

அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறதெனும் விடயம் ஒரு புறத்தில் அரசாங்கத்திற்கும் மறுபுறத்தில் தனிப்பட்ட ரீதியிலும்

சுமத்தப்படும் ஒரு காலகட்டத்தில் பண்பாடுள்ள ஒரு சமூகத்திற்கான எமது செல்வழி தொடர்பாக சட்டமா அதிபர் அவர்கள்

ஆற்றிய உரைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

2015 ஜனவரி தேர்தல் பிரகடனத்தில் நல்லாட்சி கோட்பாட்டினை முன்வைத்தோம். இது எமது அரசாங்கத்திற்கும்

நம்நாட்டுக்கும் ஒரு புதிய விடயமல்ல. எமது அயல்நாடான பாரத தேச அசோக சக்கரவர்த்தி முதல் எமது ஒவ்வொரு

இராசதானி ஆட்சிக் காலகட்டத்தின் போதும் நல்லாட்சிக் கோட்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் வரலாற்று நூல்களில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சிக் கோட்பாட்டுக் கொள்கை தொடர்பாக நாம் அனைவரும் புரிந்து வைத்திருந்த போதும் எமது நாட்டில்

உள்ளவர்கள் அதற்குப் பழக்கப்பட்டிருக்காததன் காரணமாகவே 2015 ஜனவரி 8ஆம் திகதி முன்வைக்கப்பட்ட கொள்கைப்

பிரகடனத்தில் நல்லாட்சிக் கோட்பாட்டுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.

அரச ஊழியர்கள் என்ற ரீதியிலும் நிறுவனத் தலைவர்கள் என்ற ரீதியிலும் நீங்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற போதும் நீங்கள்

13 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச சேவையின் தலைமைத்துவத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்.

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்கும் இவ்வாறான பிரச்சினைகளை நான் முன்பிருந்த

அரசாங்கங்களிலும் கண்டுள்ளேன். இந்த நாட்டு அரச சேவையின் ஆகக் கீழ்மட்டத்திலிருந்து இப் பதவிக்கு வந்த ஒருவர்

என்ற ரீதியிலும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அரச சேவையின் பல்வேறு துறைகளில் வெவ்வேறு பதவிகள் வகித்த

நபர்களுடன் நட்புறவுடன் பழகிய ஒருவர் என்ற ரீதியில் இந்த நாட்டின் அரச சேவையில் பணிபுரியும் அனைவரதும்

ஆசாபாசங்கள் மற்றும் பிரச்சினைகளை நான் நன்கறிவேன்.

அரச சேவையில் பணியாற்றுகின்ற போது தீர்மானம் மேற்கொள்வது தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது.

செயல்திறன் தொடர்பான பிரச்சினை காணப்படுகிற. எமது அரச சேவையின் உற்பத்திதிறன் பற்றி மத்திய வங்கி ஆளுனர்

தனது உரையில் குறிப்பிட்டார். அரச சேவையின் உற்பத்திதிறன் தொடர்பாக திருப்தியளிக்கும் விதமாக

இல்லையென்பதை நாம் அறிவோம். அது இவ் அரசாங்கத்தில் மாத்திரமல்ல கடந்த பல தசாப்தங்களாக நிலவிய ஆட்சியின்

போதும் காணப்பட்டது. ஆகவே அரச சேவையின் உற்பத்திதிறனை ஐம்பது வீதத்திற்கும் மேலதிகமாக அதிகரிப்பதற்கு

நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நாம் செல்லும் பாதையில் அனைத்து மக்களிடத்திலும் காணப்பட வேண்டிய

பண்பாடும் ஒழுக்கமும் தொடர்பான பிரச்சினையினை இந்நாட்டு மக்களின் பிரதான ஊழியன் என்ற வகையில் நான்

பார்க்கின்றேன். அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரசைகள் தற்போது நாடு

எதிர்நோக்கியுள்ள நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஒன்றுபடல் வேண்டும்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் தவறிழைப்பதாயின் அத்தவறு சிறியதா பெரியதா என்பது முக்கியமல்ல. நான்

தவறிழைத்த வண்ணம் எனது அமைச்சரவை தவறிழைக்கும் போது அதனைத் தட்டிக் கேட்க என்னால் முடியாது. நானும்

எனது அமைச்சரவையும் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறிழைக்கும் பட்சத்தில் அரச உத்தியோகத்தர்கள் தவறிழைக்கும்

போது எம்மால் அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது. அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் தனது

ஒழுக்கவியலுக்கு மாற்றமாக தவறிழைப்பார்களாயின் பொதுமக்கள் இழைக்கும் தவறினை எம்மால் தட்டிக் கேட்க முடியாது.

ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக அரசியல்வாதிகள் முக்கிய

பங்காற்றல் வேண்டுமென நான் கருதுகிறேன். அதற்கடுத்த படியாக அரச சேவையின் ஏனைய அனைத்து

உத்தியோகத்தர்களும் இதற்காக முன்வர வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்திலும் முன்னைய அரசாங்கங்களிலும் அரச சேவையின் பதவிநிலை உத்தியோகத்தர்களும்

நிறைவேற்று உத்தியோகத்தர்களும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் போது தமது தனிப்பட்ட பாதுகாப்பு

தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அரச உத்தியோகத்தர்களாக அன்றி அரச ஊழியர்கள் என

அறிமுகப்படுத்தப்படுபவர்கள் தொழிற்சங்கங்கள் மூலம் போராடிய ஒரு யுகம் காணப்பட்டது. உண்ணாவிரதம்,

சத்தியாகிரகம், நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்தல், அரசியல்வாதிகளுக்கு அறிவித்தல் போன்ற உரிமைகள் மற்றும்

வரப்பிரசாதங்கள் ஜனநாயக சமூகத்தில் அரச ஊழியர்களுக்கு உண்டு.

ஆயினும் பதவிநிலை உத்தியோகத்தர்களும் நிறைவேற்று உத்தியோகத்தர்களும் தமது மனக்குறைகளை எடுத்துரைக்க

கூடிய குறைகேள் அதிகாரி ஒருவரின் தேவையை நான் உணர்கிறேன். இவ்ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் அரச

சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் என்னைச் சந்தித்து அவர்களின் பிரச்சினை பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

அரசியல்வாதிகளினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அனைத்து

அரசாங்கங்களிலும் இவ்வாறு நடைபெற்றுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் தருவாயில் எவ்வாறு தனது

பதவியைத் தக்க வைப்பது என்பது பற்றிச் சிந்தித்து இறுதியாக குறித்த வேலை செய்துகொடுக்கப்படும் சந்தர்ப்பங்களும்

இருந்தன.

அரச சேவையின் அனைத்து தரத்திலான பிரதானிகள் முதல் ஊழியர்கள் வரை நியாயமான முறையில் பணியாற்றும் போது

அதில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது. அரசியல்வாதிகள், அரச

உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் சுதந்திரமானதும் அறிவுபூர்வமானதுமான சிந்தனையுடன் பணியாற்றி தமது

கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுதல் வேண்டும்.

பிரதமருடனும் அமைச்சரவையுடனும் கலந்துரையாடி அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தலையீடுகள், பிரச்சினைகள்

மற்றும் மனக்குறைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விதத்தில் நடுநிலையாக பணியாற்றுவதற்கான ஒரு நிர்வாக

கட்டமைப்பை தயாரிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். உத்தியோகத்தர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு

வழியமைத்தல் குறித்த பணி வெற்றியளிப்பதற்கு காரணமாயமையும்.

நான் பதியில் நீடித்திருக்க விரும்புபவன் அல்ல என்பதுடன் சொல்ல வேண்டிய விடயத்தை காலந்தாழ்த்திக் கூறுபவனும்

அல்ல. நல்லாட்சி எனும் பெயர்பலகையுடன் யாராவது தவறிழைப்பாராயின் அத் தவறிற்கு தண்டனை வழங்கவதற்கு நான்

தயாராக உள்ளேன். நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு யாராவது ஒருவர் ஒருதீய அரசாட்சியைக் கொண்டு செல்வாராயின்

அதற்கு நான் இடமளிக்க மாட்டேன். அவ்வாறில்லாத போது நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியாகி

மக்கள் எடுக்கும் தீர்மானம் தொடர்பாக நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

எமது ஏற்றுமதி வருமானம் பற்றிய நிலைமை தொடர்பாக மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிட்டார். உள்நாட்டுக்

கைத்தொழிலின் வீழ்ச்சியே இதற்கான பிரதான காரணமாகும். கமத்தொழிலில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும்

நாட்டில் மேலதிகமாகவுள்ள அரிசி உற்பத்தி தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார். 2014ல் சுமார் பத்து இலட்சம் மெட்ரிக்

டொன் கொதுமை மாவினை இந்நாட்டு மக்கள் நுகர்ந்துள்ளனர். இதனை அரைவாசியாக குறைக்க முடியுமாயின் அரிசி

மேலதிகமாக இருக்காதென நான் நம்புகிறேன்.

எமக்குள்ள இலக்குப் பணிகளை நாம் நிறைவேற்றும் போது எப்சீஐடீ பற்றி கதைக்கப்படுகிறது. உத்தியோகத்தர்கள்

மாத்திரமன்றி ஒருசில அமைச்சர்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஒருசில பிரிவுகளில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்

போது இவற்றை நாம் செய்தால் எப்சிஐடீ இற்குச் செல்ல வேண்டி ஏற்படும் என நினைத்து பின்வாங்குதல் மற்றும்

செயற்திறன் அற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எப்சீஐடீ பீதியை நாம் எமது மனங்களிலிருந்து

அகற்றுதல் வேண்டும். ஏன் எப்சீஐடீ இந்த நாட்டில் உருவாகியதென்பதை நீங்கள் அறிவீர்கள். நாட்டில் இடம்பெறும் ஊழல்

மோசடிகளைக் குறைப்பதற்குத் தேவையான புதிய நிறுவனங்களை தாபித்தல், இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவினைப்

பலப்படுத்தல், அரச சேவையிலுள்ள அனைவரும் தலைநிமிர்ந்து பணியாற்றக் கூடியவாறு சுயாதீன ஆணைக்குழுக்களை

நிறுவுதல் ஆகியன எனது தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை நாம் நிறைவேற்றினோம். 19ஆவது

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் இதுவரை ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். பௌதிக வளம் மற்றும் மனித வளப் பற்றாக்குறை

உள்ளது. ஆணைக்குழுக்களின் பணிகள் பற்றிய வரையறைகள் தொடர்பாகவும் பிரச்சினை காணப்படுகிறது.

ஆணைக்குழுக்களின் வரையறை எத்தகையது என்பதே ஆணைக்குழுக்கள் பணியாற்றும் போது எதிர்கொள்ளும்

பிரச்சினையாக உள்ளது. நிறுவன ரீதியான அதிகாரங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்பாக நிறுவன ரீதியாக

தொழிற்படும் நிலை இல்லை. ஆகவே பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு சபையிலும் கலந்துரையாடி சுயாதீன

ஆணைக்குழுக்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் வரையறைகள் என்பன பற்றி தீரமானித்து இவற்றை

செயற்திறனாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் எண்ணியுள்ளோம்.

அன்று நாட்டில் நிலவிய பாதகமான நிலைமைகள் காரணமாகவே இவ்வாறான நிறுவனங்கள் தோற்றம் பெற்றது.

எங்காவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும் என்பதால் ஆகும். நாம் எப்சீஐடீ செல்ல நேரிடுமென தற்போது

அரசியல்வாதிகளும் கூறுவார்களாயின் அவர்களிடத்திலும் வெட்கமும் பயமும் காணப்படுகிறது. இது நாட்டுக்குத்

தேவையாகும். நம்மிடம் வெட்கம் இல்லையெனில் மனிதன் விலங்ககளைப் போல் தான் இருப்பான் என நாம்

கேள்விப்பட்டுள்ளோம். எப்சீஐடீ செல்ல நேரிடுமென உத்தியோகத்தர்களும் கூறுவார்களாயின் அவர்களிடத்திலும் ஊழல்,

மோசடி, களவு என்பன பற்றிய பயம் உருவாகியுள்ளது. சமூகத்தை மாற்றியமைப்பதற்கான தேவை உள்ளது. அதற்காக நாம்

சுயாதீன ஆணைக்குழுக்களை தாபித்தோம். சட்டத்தை அமுல்படுத்துவதற்காக எப்சீஐடீ போன்ற நிறுவனங்களை

உருவாக்கினோம். அதுதொடர்பாக நாட்டுக்கு புதியதொரு கோட்பாட்டினை வழங்கினோம். இது நல்லாட்சி அரசாங்கமென

கேளிக்கையாக கதைக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் அறிவோம். நாட்டில் ஏதாவதொன்று நடந்துவிட்டால் நல்லாட்சி

அரசாங்கம் அவ்வாறு தான் என சொல்கிறார்கள். ஆயினும் நல்லாட்சிக் கோட்பாட்டையும் நல்லிணக்க கோட்பாட்டையும்

குறைத்து மதிப்பிட்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

அரசாங்கம் என்பது மைத்ரிபால சிறிசேனவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா அல்லது வேறு ஒருவரா என சிலபோது

பல்வேறு நபர்கள் வினா எழுப்புகின்றனர். மத்திய வங்கி ஆளுனர் முன்வைத்த கருத்துக்களுக்கு அமைவாக நாளைய தினம்

பிறக்கவுள்ள பிள்ளைகளுக்காக சுபீட்சமானதும் ஒழுக்கவிழுமியமானதுமான ஒரு நாட்டை உருவாக்குவதற்கு நாம்

அனைவரும் எமது பொறுப்பினை நிறைவேற்றுகின்றோமா என்ற கேள்வியை நான் உங்களது மனங்களைத் தொட்டு கேட்க

விரும்புகிறேன். ஆகவே இது என்னுடையதோ அல்லது அமைச்சரவையினதோ பிரச்சினை அல்ல. அது உங்களது எதிர்கால

சந்ததியினர் தொடர்பான பிரச்சினை மாத்திரம் அல்ல. அனைத்து நாட்டு மக்களதும் எதிர்காலத்திற்காக இந்த நாட்டைக்

கட்டியெழுப்புவதற்கு, ஒழுக்கம் நிறைந்த பண்பாடுள்ள ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் உன்றிணைந்து

பணியாற்றுதல் அவசியமென்பதை நாம் அனைவரும்ஏற்றுக்ெகாள்ள வேண்டும்.

அகவே அரசியல்வாதிகள் ஒருபுறம், அரச உத்தியோகத்தர்கள் ஒருபுறம், நாட்டுமக்கள் இன்னொரு புறம் என்று இல்லாமல்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்காக கடமைகளையும் பொறுப்புக்களையும் மிகுந்த நட்புறவுடனும் சகோதர

வாஞ்சையுடனும் நிறைவேற்றுதல் வேண்டும்.

ஜனாதிபதி என்ற ரீதியில் நான் உங்கள் அனைவர் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். உங்கள் அனைவரையும் நான்

மதிக்கின்றேன். உங்கள் மீதுள்ள நம்பிக்கை மற்றும் உங்கள் மீதுள்ள மரியாதையின் அடிப்படையில் அரச கொள்யைினை

நடைமுறைப்படுத்தி இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வலுவடையச் செய்யுங்கள். சுபீட்சமான ஒரு நாட்டைக்

கட்டியெழுப்புங்கள். இந்த நாட்டை ஒழுக்கம் நிறைந்த பண்பாடுள்ள ஒரு நாடாக கட்டியெழுப்புங்கள். நாளைய

தினம்பிறக்கவுள்ள பிளளைகளுக்காக நல்லதொரு நாட்டை உருவாக்குவதற்கு நாம் எமது பொறுப்புக்களையும்

கடமைகளையும் நிறைவேற்றுவோம் என நான் கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன்.

எமது அரசியல்வாதிகளின் தவறினால் சிலபோது மாவட்ட அபிவிருத்திக் குழு உரிய வேளையில் கூட்டப்படுவதில்லை.

தீர்மானம் மேற்கொள்வதற்காக மாவட்ட வெயலாளர்கள் எவ்வளவு சிறமப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். எமது

அமைச்சர்களின் தவறினால் அமைச்சுக்களில் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. ஒரு

வருடகாலமாக முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடாத்தப்படாத சில அமைச்சுக்களும் உள்ளது. அதே போல் ஒரு

வருடகாலமாக முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நடாத்தப்படாத சில திணைக்கங்களும் காணப’படுகிறது. ஆகவே மாதாந்தம்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு திகதி குறித்து அனுப்புவதற்கு நாம்தீர்மானித்துள்ளோம். மாதத்தின் முதலாம் அல்லது

இரண்டாம் வாரத்தினை இதற்காக பயன்படுத்த முடியும். மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்ட விவசா குழு, பிரதேச

அபிவிருத்திக் குழுவிற்கு திகதி குறிப்பிட்டு வருடாந்த நேரஅட்டவணையை தயாரித்து அனுப்புவதற்கு எண்ணியுள்ளோம்.

பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சர்கள் மற்றும்பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புக்களை உரியவாறு

நிறைவேற்றுவார்களாயின் அரச உத்தியோகத்தர்கள் சங்கடத்திற்கு உள்ளாக மாட்டார்கள்.

அவ்வாறே நிரல் அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் முன்னேற்ற மீளாய்வுக்

கூட்டங்கள் தொடர்பாகவும் மிக மோசமான ஒரு நிலைமை காணப்படுகிறது. நடைமுறை ஆண்டை

எடுத்துக்கொள்வோமாயின், 06 மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிதி முன்னேற்றம், பௌதிக முன்னேற்றம் என்பன பற்றி

எத்தனை பேர் உங்களது நிறுவனங்களில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்களென நான் கேட்க விரும்புகிறேன். சில

நிறுவனங்களில் இவை இடம்பெறுவதில்லை என்பது எனக்குத் தெரியும். அவ்வாறாயின் இலக்கு நோக்கிய ஒரு

வேலைத்திட்டத்திற்கு நாம் எவ்வாறு செல்ல முடியும்.

மத்திய வங்கி ஆளுனரும் சட்டமாஅதிபரும் கூறியவாறு இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்வதற்கு எமது

நாட்டின் நிறுவாக கட்டமைப்பினுள் காணப்பட வேண்டிய வினைத்திறன் மற்றும் ஒழுங்கு, இலக்கு நோக்கிய பணி,

அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல், சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவும் அதற்கு அப்பால் சென்று இது எமக்குரிய கடமை,

மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடமைப் பொறுப்பு என்று

எண்ணி அதனை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் அரப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016-07- 24

SHARE