இலங்கையில் மெதுவான நடைமுறைகள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

229

 

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் மெதுவான நடைமுறைகளையே காணமுடிவதாக சர்வதேசமன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளநிலையில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

அதில் இலங்கை அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும்வெளிப்படைத்தன்மையில்லாமை என்பன தொடர்பில் மனித உரிமை காப்பாளர்கள்அதிருப்தி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2009ம் ஆண்டு போரின் போதும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்பெரும்பாலானவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டவிடயங்களில் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை உறுதியளித்த நீதி,உண்மை, மீண்டும் எழாத வன்முறை போன்ற பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னும்கிடப்பில் உள்ளன என்றும் மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனோரின் உறவினர்களிடம் தமதுஉறவுகள் குறித்த தகவல்களை பகிர வேண்டும்.

அத்துடன் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இரகசிய தகவல்கள் என்ற விடயம், காணாமல்போனோர் அலுவலகத்துக்கு பொருந்துவதை தவிர்க்க வேண்டும்.

காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அவர்களின் உறவினர்கள் இதன்போதுதகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

SHARE