இலங்கை அரசியல் வாதி சிங்கப்பூரில் கைது

288

 

 

மத்திய மாகாண சபை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பயணமானார்கள்.

அதில் ஆளுமகட்சியின் ஒரு உறுப்பினர் அந்நாட்டு பெண்ணொருவருடன் முறைகேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கபூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில், குறித்த உறுப்பினர் மாத்திரம் நாடு திரும்பியிருக்கவில்லை.

இது தொடர்பில் விஜயத்தில் கலந்துகொண்ட மத்திய மாகாண சபை செயலாளர் பண்டார தென்னகொனிடம் வினவியபோது, அப்படியான ஒரு சம்பவம் தனக்கு தெரியாது எனவும், குறித்த உறுப்பினர் நாட்டு வந்தாரா, இல்லையா என்பது தொடர்பிலும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை தலைவர் நிமலசிறியிடம் வினவியபோது, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்ததால், அது தற்செயலாக நடைபெற்றதொண்டு எனவும், அது பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய விடயம் அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று குறித்த உறுப்பினரை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும், அவரை பொலிஸுக்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை குறித்த உறுப்பினர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூரில் தங்கியதன் காரணமாக அவர் நாடு திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எதுஎப்படியோ, குறித்த சம்பவத்தை ஊடகங்களுக்கு மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தெளிவாகத் தெரியவருகிறது.

SHARE