இலங்கை டெஸ்ட் தொடரில் பாடம் கற்றுக் கொண்ட இஷாந்த் சர்மா: சொல்கிறார் அஸ்வின்

317
தனது ஆக்ரோஷமான நடத்தையால் தடைபெற்றுக் கொண்ட இஷாந்த் சர்மா நடந்தவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா எல்லை மீறி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இஷாந்த் சர்மா பற்றி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுகையில், “இலங்கை தொடரில் இஷாந்த் ஆக்ரோஷமாக செயல்பட்டதால் தான் வெற்றி பெற முடிந்தது.

அவரது பங்களிப்பை மறந்து விடக் கூடது. அவர் எல்லை மீறியிருக்கலாம். ஆனால் அதற்காக ஒரேயடியாக தாக்குதல் விமர்சனம் செய்யக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.

அவர் கண்டிப்பாக இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார். வரும் போட்டிகளில் கட்டுப்பாடுடன் கூடிய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தருவார்.

மேலும், நான் பஸ் டிரைவராக இருந்தாலும் அதில் உலகில் சிறந்தவனாக விளங்கவே நினைப்பேன். இதுதான் எனக்கும் விராட் கோஹ்லிக்கும் உள்ள பொதுவான மனநிலை.

எனக்கும் கோஹ்லிக்கும் மட்டுமல்ல, கோஹ்லி மற்ற வீரர்களிடத்திலும் அப்படித்தான் உள்ளார். அவர் யாருக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் தடையைத் தாண்டி வர உதவி புரிவார்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE