இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி அமெரிக்காவில் அச்சத்தில் வாழ்கிறார்!

361
தாம், தமது குடும்பத்தில் இருந்து தப்பிச்சென்று 6 வருடங்களாகியும் இன்னும் அச்சத்துடன் வாழ்வதாக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள புதிய நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிப்கா பாரி என்ற இந்த மாணவி, பெற்றோருடன் குடிபெயர்ந்து அமெரிக்கா ஒஹியோவில்; வசித்து வந்தார்.

இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியேறி கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

இதனையடுத்து தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக மாணவி புதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் எடுத்த தீர்மானம் குறித்து கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

8 வயதாக இருக்கும் போது ரிப்காவின் இடதுகண்ணில் விளையாட்டு விமானம் ஒன்று பட்டதன் காரணமாக அவர் இடதுகண் பார்வையை இழந்தார்.

இதன்பின்னர் 12 வயதில் அவர் வீட்டில் இருந்து வெளியேறி கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டார்.

தற்போது 22 வயதாகியும் இன்னும் பயத்துடனேயே வாழ்வதாக ரிப்கா குறிப்பிட்டுள்ளார்.

SHARE