இலங்கை விஜயம் குறித்து பாப்பாண்டவர் இன்று தீர்மானிப்பார்
இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து பாப்பாண்டவர் இன்றைய தினம் தீர்மானிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பேராயர்களை, பாப்பாண்டவர் தனித்தனியாக சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை பாப்பாண்டவரை கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஏனைய இலங்கைப் பேராயர்களும் சந்தித்தனர்.
இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கத்தோலிக்க பேராயர்கள் கவனம் செலுத்த வேண்டுமென பாப்பாண்டவர் கோரியிருந்தார். இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பின் போது இலங்கை விஜயம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.