இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் ஐ.எஸ். தலைவன் அல்-பாக்தாதி அறிவிப்பு,

321

 

இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி அறிவித்து உள்ளான். இதற்கிடையே இல்லை என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
201512211617261822_Islamic-State-chief-Baghdadi-claims-he-s-global-leader-of_SECVPF
இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் என்று அல்-பாக்தாதி அறிவித்து உள்ளதை பாகிஸ்தான் தலிபான் எதிர்த்து உள்ளது.
இயக்கங்களின் தலைவர் விவகாரம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
அல்-பாக்தாதி கலிபா கிடையாது, உலக இஸ்லாமியர்களின் தலைவர் ஆகமுடியாது, வெறுமனே உள்ளூர் (சிரியா& ஈராக்) தீவிரவாத இயக்கங்களின் தலைவரே என்று பாகிஸ்தான் தலிபான் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
யார் இந்த அல்-பாக்தாதி?
நீண்ட நாட்கள் வெளியில் முகம் காட்டாமல் இருந்த தீவிரவாதி அல்–பாக்தாதி சமீபத்தில் மொசூல் நகர மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினான். முதல் முறையாக வெளியான அவனது வீடியோ, இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள சமரா என்ற இடத்தில் கடந்த 1971–ம் ஆண்டில் பிறந்த இவன், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றவன். கடந்த 2003–ல் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக் மீது போர் தொடுத்த போது, அங்குள்ள ஒரு மசூதியில் மதகுருவாக இருந்தார்.
அமெரிக்க படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சில சிறிய தீவிரவாத குழுக்களுக்கு அல்–பாக்தாதி தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. 2006–ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அல்–பாக்தாதி பின்னர் 2009–ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டான். பக்கா என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ முகாமிலும் சில காலம் காவலில் வைக்கப்பட்டு இருந்தான். விடுதலைக்கு பிறகு ஒசாமா பின்லேடனின் அல்–கொய்தா இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினான்.
அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011–ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டது அந்த இயக்கத்துக்கு பேரிடியாக அமைந்தது.
இதனால் கொதித்து எழுந்த அல்–பாக்தாதி, பழிக்குப்பழி வாங்கப் போவதாக அறிவித்தான். அதன்பிறகு ஈராக்கில் நடந்த சில தாக்குதல்களுக்கு அவரது தலைமையிலான குழு பொறுப்பு ஏற்றது அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. எதிரிகளை கொடூரமாக தாக்கி கொல்வதோடு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அதிபயங்கர போக்கை கொண்டவன் அல்–பாக்தாதி. இதனால் இவருக்கும், பின்லேடனின் மறைவை தொடர்ந்து அல்–கொய்தாவின் தலைமை பொறுப்பை ஏற்ற அல்–ஜவாஹிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிளவு அதிகரிக்கவே, அல்–ஜவாஹிரியை பின்பற்றப் போவது இல்லை என்றும், இறைவனின் கட்டளையை பின்பற்றி நடக்கப்போவதாகவும் அறிவித்த அல்–பாக்தாதி, ஈராக்கையும், சிரியாவையும் ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்தை தொடங்கினான்.
SHARE