இலங்கைவாழ் தமிழ்மக்கள் இந்தியாவை நம்பியிருந்ததொரு காலம். இந்திய ஹெலிகொப்டரில் 1987ம் ஆண்டு யூலை 24ஆம் திகதியன்று புதுடெல்;லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளின் தலைவர் உள்ளிட்ட குழு வினர் இந்தியாவின் அசோகா ஹோட்டலில் உள்ள 518ம் இலக்க விடுதி யில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவ தைவிட சிறைவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறலாம். பிரபாகரன் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதிக்கு வெளியே இந்தியாவின் கறுப்புப்பூனைப் படையினர் காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பிர பாகரன் உள்ளிட்ட குழுவினர் வெளி யேறவும், வெளியில் எவரையும் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
பேச்சுவார்த்தைக்கு என்று கூறி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் அங்கு சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். இவ்விடயம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது சந்தேகம் கொள்ளவைத்தது. காரணம் என்னவென்றால் பேச்சுவார்த்தைக்கு என அழைத்து அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். இந்தியா மீது விடுதலைப்புலிகளுக்கு இருந்த நம்பிக்கை இந்த சம்பவம் மூலம் சிதறடிக்கப்பட்டது. இந்தியாவை நம்பி விடுதலைப்புலிகள் அங்கு சென்று ராஜீவ்காந்தியுடன் பேச்சுக்கள் நடத்திவருவோம் என்பதற்கு மாறாக அவர்களை ஏமாற்றியதன் விளைவே புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இந்தியா மீதான நம்பிக்கை முற்றாக அற்றுப்;போனது எனலாம்.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என விடுதலைப்புலிகளை சிந்திக்கவைத்த சம்பவமாக அது அமைந்தது. 24ம் திகதி முதல் அசோகா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 04 நாட்களின் பின்னர் அதாவது 28ம் திகதியே ராஜீவ்காந்தி சந்தித்தார். ஏனைய இயக்கங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வதற்கும் இந்த சந்தர்ப்பத்தை ராஜீவ்காந்தி அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் அடங்கிய குழுவினருக்கு தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், பிரபாகரனைச் சந்தித்த பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு பிரபாகரனை வற்புறுத்தியிருந்தார். அசோகா ஹோட்டலில் நடைபெற்றதான சந்திப்பின்போது, இவ்விடயங்கள் தொடர்பாக இருதரப்பும் செய்திகள் வெளியிடவில்லை. ஆனால் அன்றைய தினம் இந்தியாவின் பல ஊடகங்களில் விடுதலைப்புலிகள் மற்றும் ராஜீவ்காந்தி சந்திப்பு தொடர்பில் பல யூகங்களாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர் அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகவும், இந்திய அரசு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு எவ்வாறு எல்லாம் தொந்தரவு கொடுத்தது என்கின்ற விடயங்கள் முழு உலகிற்கும் தெரியவந்தன. யூலை மாதம் 28ம் திகதி இரவு அசோகா ஹோட்டலில் புலிகளின் தலைவர் பிரபா கரனையும், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினையும் மீண்டும் சந்தித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன், மற்றும் இந்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும், இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள். சிங்கள அரசினால் நாம் பல தடவைகள் ஏமாற்றப்பட்டுவிட்டோம். தமி ழீழ கோரிக்கையை கைவிடுவது தற்போது சாத்தியமற்றது என பிரபா கரன் ராஜீவ்காந்தியிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு நேர்மையானவழிக்கு திரும்பிக் கொள்ளுங்கள். இலங்கையரசு ஒப்பந்தத்தினை மீறுமாயின் அதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பிரபாகரனின் மனதினை மாற்றுவதற்கு ராஜீவ்காந்தி முனைந்தார். ஆனா லும் பிரபாகரன் தனது பிடியிலிருந்து எள்ளளவேனும் மனம் தளரவில்லை. ராஜீவ்காந்தியின் நயவஞ்சகமான பேச்சுக்களுக்கு அடிபணியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார். இதனால் கோபமடைந்த ராஜீவ்காந்தி உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என தெரிவித்திருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
ராஜீவ்காந்தி பிரபாகரனைச் சந்திக்கும் முன்பு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீட்ஷித், பிரபாகரனைச் சந்தித்திருந்தார். இவரும் இலங்கை இந்திய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை பிரபாகரன் குழுவினருக்கு தெரிவித்திருந்தார். ஒப்பந்தத்தினை வாசித்த பிரபாகரன் அதில் சில விடயங்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக புலிகளின் ஆயுத ஒப்படைப்பு, வடகிழக்கு சர்வஜன வாக்கெடுப்பு இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது என பிரபாகரன் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்த தீட்ஷித் நீங்கள் 04 தடவைகள் முட்டாளாகி விட்டீர்கள் எனத்தெரிவிக்க, அதற்கு புலிகளின் தலை வர் 04 தடவைகள் நாங்கள் எங்கள் மக்களை காப்பாற்றியுள்ளோம் என்று அர்த்தம் என தெரிவித்தார். அசோகா ஹோட்டலில் பாதுகாப்புக்கள் தளர்த்தப்பட்ட பின்னர் பிரபாகரன் அவர்கள் தொலைபேசியில் வைகோவுடன் உரையாடியிருந்தார்.
அவர் வைகோவிடம் கூறிய தாவது, நாம் இந்திய அரசினா லும், ராஜீவ்காந்தியினாலும், இலங்கையரசினாலும் ஏமாற்றப் பட்டுவிட்டோம். எனது முது கில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துகொள்ளலாமோ என்று கூட நினைத்தேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான எங்கள் சகோ தரன், சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவினை எடுக்கமுடியவில்லை என்று பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் அசோகா ஹோட்டலில் விடுதலைப்புலிகளுக்கு நடந்த சம்பவமே இந்தியாவுடனான பகைமைத் தன்மையினை தோற்றுவித்ததாக இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அரசிற்கும் இடையில் யுத்தம் வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் அந்நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியையும் இழக்கநேரிட்டது. இவர் கொலை செய்யப்பட்டதன் பின்னரே விடுதலைப்புலிகளை அழித் தொழிக்கவேண்டும் என்ற திட்டத்தை இந்திய அரசு வகுத்துக்கொண்டது. அதுமட்டுமல்லாது தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவிற்கு உடன்பாடு இல்லை. மாறாக விடுதலைப்புலிகளினுடைய தமிழீழ கோரிக்கைகளை உடைத்தெறிந்து பிரபா கரனின் கதையை முடிக்கவேண்டும் என்று தீர்மானித்தே, மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவடைய இந்திய அரசு தனது பூரண ஆதரவினை வழங்கியிருந்தது எனலாம்.
வடகிழக்கில் செறிந்து வாழக்கூடிய தமிழ்மக்கள் பிரபா கரனின் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தவர்களாகவும், பிரபா கரனை தமிழ்த்தேசியத்திற்கு குரல்கொடுக்கும் ஒரே தலைவர் எனவும் நம்பியிருந்தனர். அவ்வாறே தமிழ்மக்களுக்காக பிரபாகரனின் செயற்பாடுகளும் அமையப்பெற்றிருந்தன. இதற்குப் பின்னரான அரசியல் முன்னெடுப்புக்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினூடாகவே இலங்கையரசு கையாண்டுவந்திருந்தது.
1987 – 2009 வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள் வரை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலைக்காக எந்த அரசிற்கும் விலை போகாது செயற்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதன்பின்னராக வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று நழுவிப்போகும் அரசியலை செய்துகொண்டிருப்பது கவலைக்குரிய விடயமே. அதுமட்டுமல்லாது மீண்டும் இந்தியாவின் புதிய அரசுடன் பேச்சுக்கள் நடாத்த தயாராகவிருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவை நம்பி கழுத்தறுக்கப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ. பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட புலேந்திரன் குமரப்பா உட்பட 12போராளிகள் சயனைட் அருந்தி 1987ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். நடந்தது என்னவென்று பார்க்கின்றபொழுது, ஒக்டோபர் 3ம் திகதி கடற்புறாவில் பயணித்துக்கொண்டிருந்த புலிகளின் வீரத்தளபதிகள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.
பலாலியில் வைத்து பின்னர் கொழும்பு கொண்டுசெல்ல புறப்பட்டவேளை, தமது கொள்ளை வழிநின்று சயனைட் அருந்தி வீரச்சாவடைகின்றனர். புலேந்திரன் குமரப்பா, அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஷ், அன்பழகன், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார் ஆகிய பன்னிரு வேங்கைகள் சங்கமமான வரலாற்றினை நினைத்துப்பார்க்கவேண்டும். இதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர்கள் மிகவும் திறமையான போராளிகள். இதனால் தமிழீழமே கொந்தளித்தது. இராணுவத்தின் நகர்வுகள் மக்களால் தடுக்கப்பட்டன.
மறியல் போராட்டங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்த்தப்பட்டது. ஒக்டோபர் 10 விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அரசிற்கும் இடையில் கடும் யுத்தம் ஆரம்பித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் கோப்பாய் வெளி யில் வைத்து கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய இராணுவம் அப்பாவிப்பொதுமக்களை கவச வாகனத்தினால் நெறித்துக்கொன்றது. அமைதி காக்கவந்த இந்தியப்படை எம் தமிழினத்திற்கு செய்த துரோகத்தை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
இவர்கள் கூட இலங்கையில் எத்தனையோ மனிதஉரிமை மீறல்களை செய்திருக்கின்றார்கள். இக்கொடுமைகளை அப்போதே சனல் 4 என்ற ஒரு தொலைக்காட்சி இருந்திருக்குமாகவிருந்தால், உலக அரங்கிற்கு தெரியப்படுத்தியிருக்கும். புதிய அரசுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பேச்சுக்களை நடத்தி வெற்றிகிடைக்கும் என நினைக்கின்றார்கள். அப்படியல்ல. தமிழ்மக்களுக்காக பல அர்ப்பணிப்புக்களை செய்த பிரபாகரனால் கடந்த 23ஆண்டுகள் இந்திய அரசுடன் பேச்சுக்கள் நடத்தி முடியாது போன நிலை யில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகிய நீங்கள் பேச்சுக்களை நடத்தி வெற்றிகாணமுடியும் என்று நினைக்கின்றீர்களா?
வளர்த்த கடா மார்பிலே பாய்வதைப்போன்றதான செய லையே இந்திய அரசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்டத்தில் போராளிகளை வளர்த்தெடுத்ததும் இந்தியஅரசே என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். முதலாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்று மையை பலப்படுத்துவதன் மூலமே வெற்றிகாண முடியும்.
கட்சியிலுள்ளவர்கள் வௌ; வேறு கோணங்களில் செயற்பாடுகளை செய்கின்றனர். இவற்றை சீர்படுத்;தவேண்டும். நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பி னருக்கு தெரிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே இதனை ஞாபகப்படுத்துகின்றேன். அஹிம்சை வழியை கடைப்பிடித்து வந்த இந்திய அரசு இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளில முள்ளிவாய்க்காலில் செயற்பட்டது. அப்போதெல்லாம் வேடிக்கைபார்த்துவிட்டு தற்பொழுது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை உசுப்பேற்றும் வகையில் அமைந்ததான இந்திய அரசின் செயற்பாடானாது முறை கேடானதொன்றாகும். ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், தனது தேர்தல் வெற்றிக்காக தமிழ்மக்கள் விடயத்தில் குரல் கொடுப்பதானது அவரது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கமாகவே அமைகின்றது.
இந்திய அரசினை நம்பி கழுத்தறுந்தது போதும். ஆகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசுடன் பேச்சுக்களை நடத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தினை முன்னெடுப்பதற்கான அஹிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். எதிரும் புதிருமாக தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடு செல்லுமாகவிருந்தால் மற்றுமொரு ஆயுதப்போராட்டம் பன்மடங்காக வெடிக்கும். அதற்கு மேற்கத்தேய நாடுகள் உந்துசக்தியாக இருந்துசெயற்படும்.
நல்லதொரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டுக்கொள்ளாது, அரசாங்கம் எம்மை பல்வேறு வழிகளிலும் தொந்தரவுகளைக் கொடுக்கும். உலக அரங்கிற்கு பிரச்சினைகளை எடுத்துச்செல்லக்கூடாது என்றெல்லாம் அச்சுறுத்தும். இந்த மண்ணிற்காக தமது உயிரை தியாகம் செய்த மக்களுக்கும், போராளிகளுக்கும் என்றோ ஒருநாள் இலங்கையரசு பதில் கூறவேண்டும். முள்ளிவாய்க்கால் சம்பவம் என்பது தமிழ்மக்களைப்பொறுத்தவரையில் ஒரு கறுப்புநாள். அதனை அரசு இன்று யுத்தவெற்றியாக கொண்டாடுகின்றது. தமிழ்மக்கள் மனதில் நெருப்பினை அள்ளிப்போடும செயலாகும். ஒரு காலத்தில் ஜே.வி.பி யினரை ஐக்கியதேசியக்கட்சியினர் டயர் மூலம் எரித்தும், சித்திரவதைகள் செய்தும், வெட்டியும் கொன்றார்கள். அவை இன்றும் சிங்கள மக்கள் மனதில் ஆறாத வடுக்களாக உள்ளது. அதேபோன்றதான ஒரு செயற்பாடுதான் தமிழ்மக்களின் இனச்சுத்திகரிப்பு என்பதாகும்.
இவற்றையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் புரிந்துகொண்டு செயற்படுவது, தமிழ்மக்களுக்கான நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான வழியாகும். இல்லையேல் இலங்கையில் தமிழினம் வாழ்ந்த வரலாறு கூட இல்லாதொழியும் நிலைக்குத் தள்ளப்படும். அப்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரோ, தமிழ் கட்சிகள் சார்ந்தவர்களோ ஆசனங்கள் இல்லாது அரசினை கையேந்திவாழும் நிலை உருவாகும். குறிப்பாக சொல்லப்போனால் மீண்டும் அந்த 1987ம் ஆண்டு நோக்கிச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதனை கவனித்துக்கொள்ளவேண்டியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுழியோடி