உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

569
உக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
உக்ரைனின் கிரிமியா பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மார்ச் 17ம் திகதி ரஷ்யாவுடன் இணைந்தது.

இதேபோன்று உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை நடத்த தொடங்கினர்.

இதன் அடிப்படையில் கடந்த 11ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இப்பகுதி சுதந்திரம் பெற்றதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மீது அவர்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்தியிருப்பதையே இந்த வாக்கெடுப்பு காட்டுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வாக்கெடுப்பு சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று உக்ரைன் அரசும் மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் வருகிற 25 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலான வாக்கு சாவடிகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டால், அந்நாட்டு பொருளாதாரத்தின் மொத்த துறைகளையும் குறிவைத்து நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.

SHARE