உசைன் போல்டை மண்ணை கவ்வ வைத்த கமெராமேன் (வீடியோ இணைப்பு)

344
உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் போது உசைன்போல்டை கமெராமேன் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உலகச் சாம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான 200 மீற்றர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்சுற்று நடைபெற்றது.இந்த போட்டியில் உசைன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.அமெரிக்காவின் காட்லின் 19.74 வினாடிகளில் கடந்து 2வது இடத்தையும், தென்ஆப்பிரிக்கா வீரர் 3வது இடத்தையும் பெற்றனர்.

உசைன் போல்ட் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேலரில் இருந்த ரசிகர்களுக்கு கையசைத்துக் கொண்டே நகர்ந்தார்.

அப்போது அவருக்குப் பின்னால் கமெராமேன் ஒருவர் தானியங்கி இரு சக்கர வண்டியில் சென்று கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து உசைன் போல்ட் மீது மோதியது.

இதில் நிலைகுலைந்த உசைன் போல்ட் பின்புறமாக கீழே விழுந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் சுதாகரித்துக்கொண்டு எழுந்த உசைன் போல்ட் எந்த வித முகபாவனைகளையும் காட்டாமல் தனது வழக்கமான சிரித்த முகத்தோடு நகர்ந்தார்.

SHARE