உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம் மை பார்த்த கதையாகும்!- சரத் என் சில்வா

428

உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம், திருட்டு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தற்போது பிழையான திசையில் பயணிக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா என உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோருவது திருடனின் அம்மாவிடம் திருட்டு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானதாகும்.

மக்கள் நீதிமன்றில் எடுக்கப்படும் தீர்ப்பு மிகவும் வலுவானது.

எல்லா நீதிமன்ற தீர்ப்புக்களை விடவும் மக்கள் நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வலுவானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

 

SHARE