உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறலில் பிரேரணை முக்கிய இடத்தை பிடிக்கும் – பிரிட்டன் பிரதமர் கமரோன்

308
 இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையைக் கண்டறியாமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளில் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமையிலும் மனித உரிமை விவகாரத்திலும் இந்தப் பிரேரணையானது முக்கிய நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்:-

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னிற்பதற்கு பிரிட்டன் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான விசாரணைகளிலும், தற்போது

இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலும், பிரிட்டன் மிக முக்கியமான கருவியாக செயற்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்ற விடயத்தை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நான் வரவேற்கின்றேன். இந்த செயற்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என நான் ஊக்குவிக்கின்றேன்.

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இலங்கையானது முன்னேற்றமடைவதற்காக கொண்டுள்ள காரணிகளைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். எனவே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை முன்னேற்றுவதற்காக ஏற்கனவே ஆரம்பித்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அனைவரது குரல்களும் ஒலிகக்கூடிய சமாதானமான மற்றும் மிகவும் சிறந்த ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உண்மையைக் கண்டறியாமை பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையிலும் மனித உரிமை விவகாரத்திலும் இந்தப் பிரேரணையானது முக்கிய நடவடிக்கையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE