உலகின் அபாயகரமான ஹொட்டல் இதுவா? 

282
சூறாவளி, ஆபத்தான சுறா மீன்கள் போன்றவைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கரொலினா மாநிலத்தில் இருந்து 34 மைல்கள் தொலைவில் கடல் பரப்பின் மேல் அமைந்துள்ளது Frying Pan Tower.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆக்ரோஷமான கடல் மட்டுமே உள்ள இந்த ஹொட்டலுக்கு படகு மற்றும் வானூர்தி மூலம் மட்டுமே செல்ல முடியும்.

அடிக்கடி ஏற்படும் சூறாவளி, மனிதர்களை வேட்டையாடும் சுறா மீன்கள் போன்றவைகளுக்கு நடுவே இந்த ஹொட்டல் அமைந்துள்ளது

மேலும் இந்த பகுதியில் ஏராளமான கப்பல்கள் மூழ்கியுள்ளதால் அட்லான்டிக்கின் கல்லறை என்றும் அழைக்கப்படுக்கிறது.

சுற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ள இந்த ஹொட்டல் முன்பு அமெரிக்க கடற்படையின் கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது.

பின்னர் காலப்போக்கில் சிதிலமடைந்து ஏலத்துக்கு வந்த இதனை கார்லோட்டி பகுதியை சேர்ந்த ரிச்சட் நெய்ல் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரின் உதவியுடன் கலங்கரை விளக்கத்தை ஹொட்டலாக மாற்றியுள்ளார்.

கடலுக்கு நடுவில் 50 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஹொட்டலில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் 12 நபர்கள் வரை தங்கலாம்.

நடுக்கடலில் அமைந்திருந்தாலும் மின்சாரம், WiFi, துருப்பிடிக்காக பொருட்களை உடைய சமையலறை போன்ற வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது.

சூரிய உதயம், அஸ்தமனம், பிரமிப்பூட்டும் நட்சத்திரங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இந்த ஹொட்டலுக்கு விஜயம் செய்கின்றனர்.

சாகச விரும்பிகள் மற்றும் த்ரில்லை விரும்புகின்றவர்களுக்கு உல்லாச பூமியாகவே இந்த ஹொட்டல் திகழ்ந்து வருகிறது.

 

SHARE