உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: கண்ணீர் விட்டு கதறும் தந்தையின் பேட்டி

295
துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் இறப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையதளத்தி வைரலாக பரவி வருகிறது.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக, அங்கு வசிப்பவர்கள் அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது அய்லானின் உடலை கடல் அலைகள் தொட்டு செல்லும் புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அய்லானின் தந்தை துருக்கி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த விபத்தில் எனது மனைவி மற்றும் இரு மகன்களையும் இழந்துவிட்டேன்.

நான் எனது மனைவியின் கைகளை இறுகப்பிடித்திருந்தேன், ஆனால் எனது கைகளில் இருந்த இரு குழந்தைகளையும் தவறவிட்ட சிறிது நேரத்தில் படகு கவிழ்ந்துவிட்டது, மிகவும் இருட்டாக தென்பட்டது, அனைவரும் கூக்குரலிடும் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது.

எனது மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை.

என் குழந்தைகள் தான் உலகின் மிக அழகான குழந்தைகள், ஒவ்வொரு நாள் காலையிலும் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்கள் தான் என்னை எழுப்புவார்கள்.
உலகத்தில் என் குழந்தைகள் போன்று அழகாக குழந்தைகள் இருக்கிறார்களா என கண்ணீருடன் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சிறுவன் அய்லான் படகில் பயணம் செய்வதற்கு முன்னர் துருக்கி கடற்கரையில் தனக்கு பிடித்த கால்பந்து விளையாட்டை விளையாடும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

துடிதுடித்த சிறுவன்..! உலகிற்கு கூறும் செய்தி என்ன…?

உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவு கொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது.

அண்மையில் சிறுவர்களின் உடலங்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி கிடப்பதை புகைப்படங்கள் வாயிலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது உலகிற்கு கூறும் செய்தி என்ன?

ஐரோப்பிய தேசம் நோக்கி அகதிகள் படையெடுப்பதற்கான பிரதான காரணம் என்ன? போன்ற பல்வேறு வினாக்களுக்கான விடைகளை லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் கனடாவில் வசித்துவரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம் பகிர்ந்து கொண்டார்.

SHARE