ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்!

291

 

சலுகை அடிப்படையில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கூறி நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ள பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சு

அக்கடிதத்தில் குறிப்பிட்டதைப் போல மக்கள் வங்கிகும் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்களுக்கும் உரிய முறைப்படி அறிவிக்காதமையால் ஊடகவியலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இதனைத் தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான திட்டம் எனக்கூறி ஊடகத்துறை அமைச்சினால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பில் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டது.

அதில் பல இறுக்கமான நிபந்தனைகள் பின்பற்றப்பட்டன. அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைச்சினால்
கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டபடி மக்கள் வங்கியினூடாக அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கும் நிறுவனங்கள் ஊடாகவும் ஊடகவியலாளர் விரும்பும் மோட்டார சைக்கிளைப் பெறமுடியும் என கடித மூலம் கவர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைவாக மோட்டார் சைக்கிளைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மக்கள் வங்கிக்குச் சென்றபோது சில மக்கள் வங்கியின் கிளைகளால் தமக்கு அப்படி ஒரு அறிவித்தலும் வரவில்லை என்று கூறப்பட்டன.

சில மக்கள் வங்கிக் கிளைகள் தமக்கு கடன் அடிப்படையைப் பின்பற்றித்தான் மோட்டார் சைக்கிள்களை வழங்குமாறு கூறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பிணைகாரர்கள், ஊடகவியலாளர்கள் கடந்த ஆறுமாத காலமாகச் சம்பளம் பெற்ற குறித்த ஊடக நிறுவனத்தின் சம்பளப் பட்டியல்-பேசிலிப் என்பவற்றுடன் சம்பளப் பட்டியலை உறுதிப்படுத்தும் படிவத்தில் குறித்த ஊடக நிறுவனத்தின்

காமையாளரின் உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கோருகின்றார்கள். பல ஊடக நிறுவனங்களுக்குச் செய்தியை வழங்கும் சுயாதீன ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படியாகக் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதனால் நேர்முகப் பரீட்சை மூலம் தெசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் வங்கிகளுக்குப் பலமுறை அலைத்து திரிந்து
விட்டு அரசினது மோட்டார் சைக்கிள் பெறும் முயற்சியைக் கைவிட்டுள்ளார்கள்.

ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கூறி சில அரசியல் தலைகள் நன்மையடைவதற்கான செயற்பாடுகளும் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படத் தோன்றுகின்றது.

அரசினால் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறி மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் 5 இன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்நிறுவனங்களில் மோட்டார் சைக்கிளைப் பெற்றால் சந்தைப் பெறுமதி விலையிலிருந்து விசேட விலைக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கடித மூலம் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் விசேட விலைக்கு தாம் மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கூறவில்லை எனக்கூறுகின்றன.

அதாவது அமைச்சினால் குறிப்பிடப்பட்டபடி Honda Shine (Het) ஏன்ற மோட்டார் சைக்கிளைக் கொள்வனவு செய்தால் அதன் சந்தைப் பெறுமதி ரூ. 261,500.00 எனவும் ஊடகவியலாளர்களுக்கான விசேட விலை ரூ. 249,500.00 எனவும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் சந்தைப் பெறுமதி விலையாகிய ரூ.261,500.00 ஐ செலுத்துமாறும் அப்படியான விசேட விலைகள் எதனையும் தாம் அறிவிக்கவில்லை எனக் கூறுவதனூடாக ஏதோ மோசடி இடம்பெறவுள்ளதோ என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான மக்கள் வங்கி, மோட்டார் சைக்கிள் வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றுக்கு சரியான முறையில் ஊடகத்துறை அமைச்சினால் அறிவிக்கப்படாத இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்துகொள்வதற்காக 2016.03.15 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் வங்கியில் குறித்த கணக்கினை ஆரம்பித்துவிட்டனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட விலைப்பட்டியல் பத்திரத்தை வங்கிக்கு வழங்குமாறும் ஊகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2016.02.29 திகதியிடப்பட்ட இரண்டாவது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகுசன ஊடகவியலாளர்களுக்கே இந்த நிலை என்றால் சாததாரண மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு அவர்கள் எப்படி அலைக்களிக்கப்படுவார்கள்.

SHARE