சிம்பு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
இதில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு ”எதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்? நான் கல்யாணத்திற்கு எதிரானவன் இல்லை. கல்யாணம்கிறது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்ணிக்கொள்வது. கல்யாணம் நடக்கிற அளவுக்கு இப்போ விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு. கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம் புரிதல் உண்டாகி, அதுக்கப்புறம்தான் கல்யாணம் சரியா அமையுது.
‘இவகிட்ட சாகுற வரைக்கும் தோற்கலாம்’ என்ற அளவுக்கு மனசை உடைக்கிற பொண்ணு கிடைக்கட்டும், திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.