எனக்குஇன்னொரு பேர் இருக்கு பாடல் எப்படி? ஒரு பார்வை

291

எனக்கு இன்னொரு பேர் இருக்கு பாடல் எப்படி? ஒரு பார்வை - Cineulagam

டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா வெற்றியை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் களம் இறங்கினார் ஜி.வி.பிரகாஷ். மீண்டும் டார்லிங் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை இன்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டார். மொத்தம் 4 பாடல்கள் அதில் இரண்டு ரீமேக், ஒரு தீம் மியூஸிக் என சிம்பிளாக இசையமைத்துள்ளார் ஜி.வி.

கண்ணை நம்பாதே எம்.ஜி.ஆர் பாடலின் ரீமேக்கில் ஒரு பாடல், வழக்கம் போல் பெண்களை நம்பாதே, நட்பை நம்பு என்று இந்த கால இளைஞர்களுக்கு ஒரு ரிங் டோன் பாடல். ஆனால், இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படியே பெண்களை திட்டுவார்கள் என்று தெரியவில்லை.

குங்குமப்பூவே கொஞ்சுப்புறாவே பாடலின் ரீமேக்கில் மைமா என்று ஒரு பாடல், தெறி படத்தில் இடம்பெற்ற செல்லக்குட்டி டைப் FOLK டூயட்.

Dance With Me பாடல் ஒரு பஞ்சாபி டோனில் ஆரம்பிக்க கிளப் பாடல் போல் தெரிகின்றது, Thatthalakka என்ற பாடல் மீண்டும் ஒரு FOLK ஆனால், ரசிக்கும்படி இல்லை.

ஜி.வி எப்போதும் பின்னணி இசையில் கலக்குவார். அந்த வகையில் படத்தின் தீம் மியூஸில் ஏதோ மாஸ் நடிகருக்கு வருவது போல் வருகிறது. அதிலும் பின்னணியில் ரஜினி வாய்ஸ் செம்ம.

மொத்தத்தில் கேட்கும் போது பிடிக்கும், மீண்டும் கேட்க கேட்க தூண்டும் அளவிற்கு இல்லை.

SHARE