எனது ‘சூப்பர் ஸ்டார்’: சச்சின் வெளியிட்ட புகைப்படம்

342
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.கிரிக்கெட்டில் பல சாதனைகள படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு டென்னிஸ் விளையாட்டு மீது அலாதி பிரியம். இவர் கிரிக்கெட் மட்டையை பிடிப்பதற்கு முன் டென்னிஸ் ராக்கெட்டை தான் பிடித்தார்.

இந்நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கரை, சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்துள்ளார்.

அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, “என்னைக் கவர்ந்த டென்னிஸ் சூப்பர் ஸ்டாருடன் இருக்கிறேன். எவ்வளவு அருமையான மனிதர் இவர். இவரை பார்த்து தான் நான் வளர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனைச் சேர்ந்த போரிஸ் பெக்கர் (47), மிகவும் இளம் வயதிலேயே (17) விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்தவர். டென்னிஸ் தரவரிசையிலும் முதலிடம் பிடித்தவர்.

SHARE