எனது மகன்மார் ‘சயனைட்’ கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டனர் : தாயின் கதறல்

276

 

எனது 19 மற்றும் 29 வய­து­டைய மகன்மார் சயனைட் கத்­தி­களால் வெட்டிக் கொல்­லப்­பட்­டனர். யுத்தச் சூழலில் பாதிப்­புக்­குள்­ளாகி கட்­டிலில் படுத்த படுக்­கையில் இருந்து கண­வரும் இறந்து பிள்­ளை­க­ளையும் பறி­கொ­டுத்த எம்மை கவ­னிப்பார் யாரு­மில்லை என்று அட்­டா­ளைச்­சேனை திராய்க்­கேணி கிரா­மத்தில் வசித்­து­வரும் சின்­னத்­தம்பி நேசம்மா தெரி­வித்தார்.

943d27f954b022fc7c7c153cb7bc8f4a killing-13

இலங்­கையில் உள்ள இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்கு அமை­வான செய­லணி பொது­மக்­க­ளி­டமும், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரி­டமும் கருத்­துக்­களை கேட்­ட­றியும் அமர்வு நேற்­று­முன்­தினம் சனிக்கிழமை செய­ல­ணியின் வலயத் தவி­சாளர் எஸ்.மனார்தீன் தலை­மையில் அட்­டா­ளைச்­சேனை லொயிட்ஸ் வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை, ஒலுவில், பால­முனை, இறக்­கமாம், திராய்க்­கேணி, ஆலை­ய­டி­வேம்பு உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் வசித்­து­வரும் மக்கள் தத்­த­மது பிரச்­சி­னைகள், கோரிக்­கைகள் என்­ப­ன­வற்றை ஆவண ரீதி­யி­லான எழுத்து மூல­மா­கவும் வாய்­மொழி மூல­மா­கவும் செய­லணி முன் சமர்ப்­பித்­தனர்.

யுத்தச் சூழலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், சொத்­துக்­களை இழந்­த­வர்கள், பிற மாவட்­டங்­க­ளி­லி­ருந்து அக­தி­க­ளாக்­கப்­பட்டு மீள்குடி­யே­றி­ய­வர்கள், தொழில்­து­றை­யினை இழந்­த­வர்கள், காணி­களை இழந்­த­வர்கள், உடை­மை­களை இழந்­த­வர்கள், மத ஸ்தலங்கள் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர், கல்வி வாய்ப்­பினை இழந்­த­வர்கள், சமூக பொரு­ளா­தார பின்­ன­டைவை சந்­தித்­த­வர்கள், அங்­க­வீ­னர்­க­ளாக ஆக்­கப்­பட்­ட­வர்கள் என சுமார் 120 க்கு மேற்­பட்ட தமிழ், முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்­த­வர்கள் கலந்துகொண்டு தமது முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­தனர்.

அவர் மேலும் கூறு­கையில்,

69 வய­து­டைய நான் தற்­போது அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கப் பிரி­வுக்­குட்­பட்ட திராய்க்­கேணி கிரா­மத்தில் வசித்து வரு­கின்றேன். கல்­முனைப் பிர­தே­சத்­தினை சொந்த இட­மாகக் கொண்ட நான் கடந்த 1990 காலப்­ப­கு­தியில் திராய்க்­கே­ணியில் வசித்து வந்தேன்.

அக்­காலப் பகு­தியில் கோயி­லுக்கு அருகில் வந்துகொண்­டி­ருந்த எனது 19 மற்றும் 29 வய­து­டைய மகன்மார் சயனைட் கத்­தி­களால் வெட்டிக் கொல்­லப்­பட்­டனர். யுத்த சூழலில் பாதிப்­புக்குள்­ளாகி கட்­டிலில் படுத்த படுக்­கையில் இருந்து கண­வரும் இறந்து பிள்­ளை­க­ளையும் பறி­கொ­டுத்த எம்மை கவ­னிப்பார் யாரு­மில்லை. எமது துன்பம் தினமும் தொடர்ந்து கொண்டே செல்­கின்­றது என்றார்.

வெள்ளைத் தம்பி அப்துல் கரீம்,

58 வய­து­டைய நான் செங்­க­லடி பிர­தேச செய­லகப் பிரிவின் கீழுள்ள உறு­காமம் கித்துள் பிர­தே­சத்தில் வாழ்ந்து வந்தேன். எனக்கு ஐந்து பிள்­ளைகள் உள்­ளனர். 1990.08.16ஆம் திகதி எமது கிரா­மத்­தி­லி­ருந்து நாம் வெளியேற்­றப்­பட்டோம். யுத்த சூழலில் நாம் மிகுந்த அச்­சத்­து­ட­னேயே வாழ்ந்து வந்தோம். இரவு நேர­மானால் நாங்கள் வீடு­களில் இருப்­ப­தில்லை. வயல் நிலங்­க­ளிலும் சேனைப் பயிர்ச்செய்கை மேற்­கொள்ளும் பிர­தே­சங்­க­ளுக்கும் சென்று விடுவோம்.

கைக்­கு­ழந்­தை­யினை எடுத்துக்கொண்டு சோளப் பயிர்ச்செய்கை இடத்­திற்குச் செல்லும் நாம் இருவர் அப்­ப­யிர்­க­ளுக்­கி­டையில் மறைந்துகொண்டு கொட்டும் பனி ­யிலும் பூச்சிக்கடி­க­ளுக்­குள்ளும் நித்­திரை செய்வோம். இவ்­வா­றாக நாம் இருவர் நித்­திரை செய்யும் தரு­ணத்தில் மற்­றைய இருவர் எங்­களை காவல் காப்பர். இவ்­வா­றாக பல வரு­டங்கள் நாம் சொல்­லொணா துய­ரங்­க­ளுடன் வாழ்ந்து வந்தோம். இவ்­வா­றாக தினமும் ஒருவர் படு­கொலை செய்­யப்­பட்டு வந்த நேரத்தில் இரா­ணு­வத்­தி­னரால் நாம் பாது­காப்­பாக மகா­ஓய பிர­தே­சத்தில் உள்ள பாட­சாலை ஒன்றில் தங்கவைக்­கப்­பட்டோம்.

அச்­சந்­தர்ப்­பத்தில் 65 வய­து­டைய எனது தந்­தையும், 60 வய­து­டைய எனது தாயும் வயோ­திபம் கார­ண­மாக எம்­மோடு நடந்து வரு­வ­தற்கு முடி­யா­ததால் அங்­கேயே அவர்கள் இருந்­தனர். சில தினங்­க­ளுக்குப் பின்னர் எமது தாயும் தந்­தையும் படு­கொலை செய்­யப்­பட்ட செய்தி கேட்டேன். செய்­வ­த­றி­யாது திகைத்து நின்றேன். இவ்­வா­றாக சில காலம் சென்­றபின் அப்­பி­ர­தே­சத்­திற்குச் சென்­ற­போது எனது தந்­தை­யி­னையும் தாயி­னையும் கொலை செய்து அருகில் உள்ள மடுவில் போட்டு புதைத்­த­தாக ஒருவர் கூறினார். நாம் என்ன பாவம் செய்தோம்? இப்­ப­டி­யா­கவா எனது தாய், தந்­தையின் உடல்கள் அடக்கம் செய்­யப்­பட வேண்டும் என என்­னிடம் நானே கேள்­வி­களைக் கேட்­டுக்­கொண்டே நாட்­களைக் கடத்திவந்தேன். என்­னதான் எம்மால் செய்ய முடி­கின்­றது? தாய் தந்­தை­யினை இழந்து தவித்த எம்­மிடம் பதிவு பதி­வென்று பலர் வந்து தர­வு­களைச் சேக­ரித்துச் செல்­கின்­றனர். எமக்கு எதுவும் கிடைத்த­தாக இல்லை என்றார்.

அலியார் ஹவ்­வாப்­பிள்ளை

68 வய­து­டைய 5 ஆண்­ பிள்­ளை­க­ளி­னதும் 4 பெண் பிள்­ளை­க­ளி­னதும் தாயான நான் செங்­க­லடி பிர­தேச செயலப் பிரிவின் கீழுள்ள உறு­காமம் கிரா­மத்­தினை பூர்­வி­க­மாக கொண்டு வாழ்ந்து வந்தேன்.

கடந்த 1990.08.08 ஆம் திகதி வழ­மை போல் ஏறா­வூரில் உள்ள எனது மூத்த மகளின் வீட்­டிற்கு எனது கணவர் ஏழு வய­து­டைய மக­னுடன் சென்று விட்டார். எட்டு நாட்­க­ளா­கியும் சென்­றவர் மீள வரவே இல்லை. என்ன நடந்­த­தென்­பதை அறியும் பொருட்டு ஏறா­வூரில் இருந்து வரு­ப­வர்­களை விசா­ரித்தோம். எந்த தக­வலும் எட்­ட­வில்லை.

பின்­னர்தான் கேள்­விப்­பட்டேன், எனது இளைய 7 வயது மகனும் கண­வரும் உற­வினர் ஒரு­வரின் வீட்டில் இருந்­த­போது அவ்­வீட்டில் இருந்த அனை­வ­ரையும் இனந்­தெ­ரி­யா­த­வர்கள் வீட்டு வாசலில் வைத்து வெட்டிக் கொன்­று­விட்­ட­தான செய்­தி­யினை. இறந்த கண­வரின் முகத்­தி­னைக்­கூட இறு­தி­யாக பார்க்­க­மு­டி­யாத துர்ப்­பாக்­கியம் எனக்கு நேர்ந்­தது. அந்த மரண சம்­ப­வத்­திலும் சிறு ஆறுதல் செய்தி என் காதில் எட்­டி­யது. என் கண­வ­ரினை கட்­டி­ய­ணைத்­த­வாறு இருந்த எனது ஏழு வயது மகனை குத்­தி­ய­போது அவரின் தலைக்குப் பக்­கத்தால் சென்ற கத்தி எனது கணவனின் வயிற்றில் குத்­துப்­பட்­டதால் பீறிட்ட இரத்தம் மகனில் உடலில் தெறிப்­ப­ததைக் கண்ட மகன் மயக்­க­முற்­றதால் மகனும் இறந்து விட்­ட­தாக எண்ணி மகனை விட்டுச் சென்­றுள்­ளனர்.

தற்­போது அந்த அகோர சம்­ப­வத்­துடன் தொடர்புபட்ட எனது மகன் மத்­திய கிழக்கு நாடொன்றில் தொழில் பார்த்து வரு­கின்றார். அவர் தற்­போது கல்­முனைப் பிர­தே­சத்தில் திரு­மணம் முடித்­துள்ளார் என்றார்.

தம்­பி­யப்பா அழ­கம்மா

பால­முனைக் கிரா­மத்தின் அருகில் உள்ள திராய்க்­கேணிப் பிர­தே­சத்தில் வசித்து வரும் நாம் வறுமைப்பட்ட குடும்­பத்தில் இருந்து கொண்டு வாழ்ந்து வரு­கின்றேன். எனக்கு ஏழு பிள்­ளைகள். எனது கணவர் கடந்த 1990களில் நடை­பெற்ற யுத்த காலத்தில் இனந்­தெ­ரி­யா­தோரால் படு­கொலை செய்­யப்­பட்டார்.

எனது வீட்­டிற்கு அருகில் உள்ள கோயி­ல­டியில் அவர் சென்று கொண்­டி­ருந்­த­போது வெட்டிக் கொலை செய்­யப்­பட்டார். கண­வரின் இழப்­பினைத் தொடர்ந்து எனது குடும்­பத்­தினை கரை­சேர்க்க நான் படாத பாடில்லை. எனக்கு உருப்­ப­டி­யான நிவா­ர­ண­மேதும் இது­வரை கிடைக்­க­வில்லை.

அல்லல்பட்டு வாழ்­வ­துதான் தமி­ழி­னத்தின் நிலையா? எமக்கு விடிவு கிட்­டு­வது எப்­போது? நாமும் சமூ­கத்தில் மற்­ற­வர்­க­ளைப்போல் வாழக்­கூ­டிய நிலை வேண்டி எமக்கும் உரிய நிவா­ர­ணங்கள் தரப்­பட வேண்டும் என்றார்.

சம்சுல் மக்கீன் ஜெலீல்

பால­முனை ஹுஸை­னியா நகர் பொது அமைப்­புக்­களின் தலை­வ­ரா­கிய நான் எமது மக்­களின் விடி­ய­லுக்காய் பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் எமது நிலை­யினை தெரி­யப்­ப­டுத்தி வரு­கின்றேன். இருந்­தாலும் எமது மக்­க­ளுக்கு இது­வரை உரிய நிவா­ர­ணங்கள் கிடைக்­கா­மையால் மிகுந்த மன வேத­னை­ய­டை­கின்றேன்.

எமது மக்கள் உறு­காமம், ஏறாவூர் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வந்து ஹுஸை­னியா நகரில் அக­தி­க­ளாக்­கப்­பட்டு வாழ்ந்து வரு­கின்­றனர். பல்­வே­றான தொழிற்­று­றை­களைக் கொண்டும் நிலவளத்­தினைக் கொண்டும், பொரு­ளா­தார ஈட்­டல்­க­ளையும் கொண்டு செயற்­பட்­ட­வர்கள் தற்­போது செய்­வ­த­றி­யாது குறு­கிய நிலப்­ப­ரப்பில் கூலித் தொழில் மேற்­கொண்டு அன்­றாட ஜீவ­னோ­பா­யத்­தினை நடத்தி வரு­கின்­றார்கள்.

இம்­மக்­களின் நல­னுக்­காக இழந்த விவ­சாயக் காணி­க­ளுக்­குப்­ப­தி­லாக மாற்றுக் காணிகள் பெற்றுக்கொடுக்­கப்­பட வேண்டும், இழந்த சொத்­துக்­க­ளுக்கும் பொரு­ளா­தாரத்திற்கும் ஏற்ப நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட வேண்டும். அது­மட்­டு­மல்­லாமல் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீட­மைப்புக் கிரா­ம­மொன்றை உரு­வாக்கித் தரு­வ­தோடு எமக்­கான நிரந்­தரத் தீர்வை பெற்று எமது மக்­களும் சுயகௌர­வத்­துடன் வாழ்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து தரு­மாறு வேண்­டு­கின்றேன் என்றார்.

மகஜர் கைய­ளிப்பு

இதே­வேளை 1990 காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­களால் அக­தி­க­ளாக வெளியேற்­றப்­பட்ட உறு­காமம் மற்றும் மன்னார் பிர­தேச மக்­களால் அவர்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் செய­ல­ணி­யி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அம்­ம­க­ஜரில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையில் நில­விய யுத்தச் சூழ­லின்­போது பல்­லா­யிரக்கணக்­கான உயிர்கள் காவுகொள்­ளப்­பட்­டன. உடைமைகள் அழிக்­கப்­பட்­டன, மக்கள் வேண்­டு­மென்றே அக­தி­க­ளாக்­கப்­பட்­டனர். பொரு­ளா­தார இழப்­புக்கள், அக­தி­க­ளாக மக்கள் வாழ வேண்­டிய அவலநிலை ஏற்­பட்­டன. குறிப்­பாக இலங்­கையின் சகல இன மக்­க­ளி­னதும் சமூக, பொரு­ளா­தார, அர­சியல், கல்வி, கலை, கலா­சார, பண்­பாட்டு வாழ்­வியல் போன்ற அனைத்துத் துறை­க­ளையும் பாதித்­துள்­ளன.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் செங்­க­லடி பிர­தேச செய­லகப் பிரி­வுக்குட்­பட்ட செங்­க­ல­டி-­ – ப­துளை ஏ- 5 வீதியின் 78 சதுர கிலோ­மீற்றர் பரப்பில் இயற்கை வனப்பும் வளமும் நிறைந்த உறு­காமம் பிர­தே­சத்தில் 78 தமிழ்க் குடும்­பங்­களும், 148 முஸ்லிம் குடும்­பங்­களும் இன வேறு­பா­டற்று கடந்த 1990களுக்கு முன்னர் சமா­தா­ன­மாக வாழ்ந்து வந்­தனர்.

4,150 ஹெக்­டெயர் நிலப்­ப­ரப்பில் நெற்­செய்­கை­யி­னையும், 3,925 ஹெக்­டெயர் நிலப்­ப­ரப்பில் சேனைப் பயிர்ச்செய்­கை­யி­னையும் மேற்­கொண்டு வந்த பூர்­வீக குடி­மக்­க­ளான உறு­காமம் பிர­தேச மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு வேண்­டு­மென்றே படு­கொலை செய்­யப்­பட விடு­தலைப்புலி­களால் திட்டம் தீட்­டப்­பட்­டது. இதன்­போது பல அப்­பாவி முஸ்லிம் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட போதிலும் எஞ்­சிய மக்கள் சுமார் ஆறா­யிரம் அரச படை­யி­னரால் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு அப்­பி­ர­தேச மக்கள் அகதி முகாம்­களில் வாழ்ந்து பின்னர் மீள்குடி­யேற்றக் கிரா­மங்­களில் அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்து வந்­நனர்.

அந்த வகையில் பால­முனை ஹுஸை­னியா நகர்ப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள உறுகாமம் பிரதேச மக்களின் ஹுஸைனியா நகர் மீள்குடியேற்றக் கிராமம் சுமார் 135 குடும்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் வீடமைப்புப் பணிக்காக 25 ஆயிரம் ரூபாய் பணமும், 13 பேர்ச் காணித் துண்டும் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்று இக் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழந்து வருகின்றன. இன்று வரை அந்த மக்கள் தமது ஜீவனோபாயத்துக்கு வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு தமது வாழ்வைக் கொண்டுசெல்கின்றனர். விவசாயக் காணிகள் தமிழர்களினால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் காணிகளுக்கான ஒப்பங்கள் தமிழர்களின் பேர்களுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளான எமக்கு மாற்றுக்காணிகளை வழங்குங்கள். இழந்த சொத்து செல்வங்களுக்கான நஷ்டஈடுகளை பெற்றுத் தாருங்கள். வீடமைப்பு வசதிகளை பெற்றுத் தாருங்கள் சகல வசதி வாய்ப்புக்களும் கூடிய ஒரு கிராமம் ஒன்றை உருவாக்கித் தாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

SHARE