எனது மகன் சூப்பரான பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார்: யுவராஜின் தாய் உருக்கம்

308

எனது மகன் மிக பொருத்த பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளார் என அதிரடி வீரர் யுவராஜ் சிங் தாய் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்குக்கும், இங்கிலாந்து மொடல் அழகியான ஹேசல் கேச்சுக்கும் ரகசியமான திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தனது மகன் மிக பொருத்த பெண்ணை தெரிவு செய்துள்ளதாக அவரது தாய் ஷப்னம் சிங் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்திய தனக்கு ஏற்ற பெண் கிடைக்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்றார்.

தற்போது சரியான பெண் கிடைத்துவிட்டாள், ஹேசல் எனது மகனுக்கு ஏற்ற சிறந்த வாழ்க்கை துணைவி, அவரது பெற்றோரின் பணிவும் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

யுவராஜின் தந்தை கூறுகையில், ஹேசல் மிக இனிமையான பெண்மனி என்றும், அவரை திருமணம் செய்த பிறகு தனது மகனுக்கு அதிர்ஷ்டம் அடித்து இந்திய அணிக்கு திரும்புவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE