எனது மிஷின் பைக் போல வருமா? இங்கிலாந்து வீரர் டேரன் காக்கை விழிபிதுங்க வைத்த டோனி

364
இந்திய அணித்தலைவர் டோனி, இங்கிலாந்து முன்னாள் வீரர் டேரன் காக் இருவரும் டுவிட்டரில் பேசிக் கொண்ட பதிவு வைரல் ஆகியுள்ளது.அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்க தொடரைத் தொடர்ந்து பெங்களூரில் நடக்கும் பயிற்சி முகாமில் டோனி கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் டோனி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு 2stroke single cylinder பைக் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் டேரன் காக், அவருடைய டுகாட்டி பைக்கை பதிவிட்டு, ‘கண்டிப்பாக என்னுடைய பைக்கை போல வர முடியாது’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பதிவிட்ட டோனி, ‘சரியாக சொல்கிறீர். ஆனால் இதை விட சிறந்தது இருக்க முடியாது’ என்று தனது மிஷின் பைக்கான ஹெல்காட் பைக்கை பதிவிட்டார்.

டோனியின் பைக்கை பார்த்து வாயடைத்து போனார் டேரன் காக். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் டேரன் காக்கை கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பைக் பிரியரான டோனியிடம் பழைய மொடல் பைக்கில் இருந்து தற்போது வந்திருக்கும் புதுரக பைக் வரை அனைத்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE