என்னையும், தாயையும் தவிக்கவிட்டு சென்றவர் எனது தந்தை: மனம் உருகிய ஒபாமா

334

 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ’மை பிரதர்ஸ் கீப்பர்’(My Brothers Keeper) ஆவணப்படத்தின் நிகழ்ச்சியில் தனது தந்தை பற்றிய தகவல்கள் பகிர்ந்துகொண்டார்.’மை பிரதர்ஸ் கீப்பர்’ என்ற ஆவணப்படத்துக்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமா தனது தந்தை குறித்து பேசியதாவது, என் வாழ்க்கையில் என் தந்தையின் பங்களிப்பு என்னவென்றால், நான் சிறுவனாக இருந்தபோது, வருங்கால ஜனாதிபதியான என்னையும் என் தாயையும் ஹவாயில் தவிக்கவிட்டுச் சென்றவர் என்ற நினைவு மட்டும்தான்.

அது ஒரு பெரிய இழப்பு, பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத உணர்வுப்பூர்வமான வலி என்றும் குறிப்பிட்டார்.

இளமை பருவம் வாழ்க்கையின் அர்த்தங்கள் புரியாத வயது, தொலைநோக்கு பார்வையும் இருக்காது, நாம் கணிப்பது சரி்தானா என்று நிச்சயிக்க முடியாது.

நம்மை சுற்றியுள்ள பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வோம். அதிலிருந்து விடுபட நாம் எடுக்கிற முடிவும் அபத்தமானதாக இருக்கும்.

அந்த பருவத்தில் நம்மீது அக்கறையுள்ள வழிகாட்டி அவசியமாகிறது. பிறகு பெரியவனாக வளர்ந்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும்.

நமக்கு பிறருடைய வழிகாட்டுதல் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.  மை ப்ரதர்ஸ் கீப்பர் ஆவணப்படத்தின் கதையோடு தனது கடந்தகால வாழ்க்கையும் ஒன்றியிருப்பதை எழுச்சியோடு கூறியுள்ளார்.

டிஸ்கவரி சேனலில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்ப இருக்கிறது. இதற்கு பெரிய எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் உள்ளது.

SHARE