என்னை மிரள வைத்த சச்சின், லாரா: சொல்கிறார் கிளார்க்

343
 

தலைசிறந்த சர்வதேச வீரர்களின் பெயர்களை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் வரிசைப்படுத்தியுள்ளார்.

மைக்கேல் கிளார்க் டுவிட்டர் வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் உங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் தலைசிறந்த வீரர்கள் யார் என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கிளார்க், சச்சின் டெண்டுல்கர், காலிஸ், ஷேன் வார்னே, கிளைன் மெக்ராத், பிரையன் லாரா ஆகியோரின் பெயர்களை வரிசைப்படுத்தினார்.

மேலும், பந்துவீச்சில் உங்களை மிரட்டியவர் யார் என்ற கேள்விக்கு, பாகிஸ்தானின் சோயிப் அக்தரின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE