எரிச்சலடையும் ஒபாமாவின் மகள்கள் 

276
வெள்ளை மாளிகையில் Wi-fi வசதி சரியான முறையில் கிடைப்பதிலை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் Wi-fi வசதி சரியான முறையில் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார், இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இணையதொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பல இடங்களில் Wi-fi வசதி கிடைப்பதில்லை.

அந்த பிரச்சனையால் நானும், பாதிக்கப்பட்டுள்ளேன், குறிப்பாக எனது மகள்களான சாஷா மற்றும் மாலியா ஆகிய இருவரும், Wi-fi வசதி கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடைவார்கள்.

வெள்ளை மாளிகை பழைய காலத்து கட்டிடம் என்பதால், சரியான முறையில் Wi-fi அங்கு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தங்கள் மாளிகையில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய விளையாட்டு நிகழ்ச்சிகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் உரையாடியுள்ளனர்.

SHARE