எரிமலைக்கு அடியில் குவிந்து கிடந்த தங்கம், வெள்ளி: கண்டுபிடித்த வல்லுநர்கள்

317
நியூசிலாந்து எரிமலைகளுக்கு அடியில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளியை சர்வதேச வல்லுநர் குழு கண்டுபிடித்துள்ளது.நியூசிலாந்தில் உள்ள வட தீவில், டூபாவ் எரிமலைப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கங்களில் சர்வதேக புவியியல் வல்லுநர் குழு ஆய்வு நடத்தியது.இதில், நீர்த்தேக்கங்களுக்கு அடியில் கணக்கிட முடியாத அளவுக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நீர்த்தேக்கங்களில் பூமியின் கீழ் அடுக்கில் உள்ள வெப்பத்தால் பல்லாண்டுகளாக, இதுபோன்ற விலைமதிப்பில்லாத உலோகங்கள் எரிமலையின் அடிப்பகுதிகளில் சேர்ந்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், எரிமலைகளின் அடியில் இருக்கும் நீர்த்தேக்கங்களின் கீழ் அடுக்குகளில் உள்ள வெப்பத்தால், அங்கிருந்து இந்த உலோகங்களை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை வெளியில் எடுப்பதற்கான உபகரணங்களை தயார் செய்தால் ஆண்டுக்கு 680 முதல் 7500 கிலோ கிராமுக்கு தங்கத்தினை இங்கிருந்து எடுக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE