எல்லை ப்புற. பாடசாலைகளில் ஏற்படும் இடமாற்றங்கள் திட் டமிட்ட செயலா வியாழேந்திரன் கேள்வி ?

275

 

எல்லை ப்புற. பாடசாலைகளில் ஏற்படும் இடமாற்றங்கள் திட் டமிட்ட     செயலா வியாழேந்திரன் கேள்வி ?

9132c5fa-fc5c-45af-8116-9eff7a0b7571

கடந்த கால யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஏறாவூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மட்/ ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயமானது தற்பொழுது அபிவிருத்தியடைந்து வரும் தமிழ் பாடசாலைகளில் ஒன்றாகும்.

தற்போது இந்த பாடசாலை கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து மிளிர்கின்றது. இவற்றிற்கு காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள். இவ்வாறு அந்த சமூகமே இப் பாடசாலையின் அபிவிருத்திக்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, இம் முன்னேற்றத்தினை தடுக்கும் முகமாக இந்த வருடம் இப்பாடசாலையின் அபிவிருத்திகளில் அர்ப்பணிப்போடு செயலாற்றுகின்ற மூன்று ஆசிரியர்களின் இடமாற்றம் பாடசாலையின் அபிவிருத்திக்கு தடையாக அமைகின்றது.

அண்மையில் மட்/ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்களின் அழைப்பிக்கு இணங்க பாடசாலைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் ஆசிரியர் இடமாற்றத்தினை இரத்துச் செய்து, தமது கல்வி நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் முன்னேறிச்செல்ல வழிவகுத்து தரும்படி மாணவர்களினால் கோரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து பேசிய  பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் மற்றும் எல்லைப்புற தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்குத் தடையாக அமையும் எந்தவொரு காரணிகளையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளார்

SHARE