எழுக தமிழ் பேரனியினால் நிலைகுலைந்து போனது தமிழரசுக்கட்சி -பிரபாகரன் எம் தலைவன் என்று படமோட்டிய சுரேஸ்பிரேமச்சந்திரன்

273

 

அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வுகாணப்பட வேண்டும் என எழுக தமிழ் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

யாழ், முற்றவெளியில் “எழுக தமிழ்” பேரணியின் கூட்டத்தின் போது வைத்திய நிபுணரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தருவருமான பி. லக்ஸ்மன் ‘எழுக தமிழ்’ பிரகடனத்தினை மக்கள் மத்தியில் முன்மொழிந்தார்.

குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும்.

14370361_1790965297853057_4271797976513040995_n 14370424_1790965364519717_5528214126977361698_n 14390692_1790965094519744_2262683193984953951_n 14469572_1790965181186402_3718599327928283710_n 14479533_1790965101186410_8064757149425237257_n 14479628_1790965197853067_1641121604362182563_n

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியை சிங்கள தேசத்திற்கும், இலங்கை தீவின் மீதுகரிசனை கொண்டிருக்கும் சர்வதேசசக்திகளுக்கும் வலியுறுத்துவதே ‘எழுக தமிழ் 2016’ எழுச்சிப் பேரணியின் நோக்கமாகும்.

“எழுக தமிழ்” 2016 எழுச்சிப் பேரணி பிரகடனம் பின்வருமாறு,

வட, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வலிந்து பௌத்த சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிங்களக் குடியேற்றங்களும்,பௌத்தவிகாரைகளும், புத்தர் சிலைகளும் இந்த ஆட்சியிலும் அரசின் அனுசரணையுடன், இராணுவத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுவருகின்றன.

தமிழர்களுடைய இன அடையாளத்தை அழிக்கவும், வட, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களின் குடிப்பரம்பலை வலிந்து மாற்றவும் அரசு எடுத்துவரும் இவ்வாறான சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துமாறு இம் மக்கள் பேரணிவலியுறுத்துகின்றது.

14390816_1790964451186475_4670291559851747443_n-1 14390816_1790964451186475_4670291559851747443_n 14391011_1790964414519812_6106542915778335361_n-1 14433054_1790964857853101_6664890081500944791_n 14440981_1790965077853079_7710555887804100287_n

யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகிய நிலையிலும் இராணுவம் மிக செறிவாக வட, கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவம் தமிழர் தாயகபிரதேசங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணியை சுவீகரிப்பு செய்தது மாத்திரம் அல்லாமல்,தொடர்ந்தும், தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

உல்லாசவிடுதிகள்,விவசாயபண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், வடகிழக்கு நிர்வாகத்திலும் தொடர்ந்தும் தலையிட்டுவருகின்றது.

வட,கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் தமிழர் தமது வாழ் வாதாரத்திற்காக தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு இராணுவத்தில் தங்கி தமது பொருளாதாரத்தைதாமே பொறுப்பேற்க முடியாத நிலையையும், இராணுவமயமாக்கலின் ஊடாக தமிழ் சமூகத்தினை பிளவுபடுத்தி, உறவுமுறைகளை சிதைத்து, தமிழர் கூட்டாக ஜனநாயக ரீதியில் அணி திரள்வதற்கு இடையூறாகவும் இராணுவம் நிலவிவருகிறது.

14441073_1790964384519815_7578314124717195046_n 14446083_1790964904519763_7105703854567229458_n 14457483_1790964984519755_3371345418509111551_n 14463158_316774468703069_4304131128780252805_n 14469525_1790964461186474_4050869441991628368_n

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான இராணுவத்தினரின் பாலியல் வன்முறை சம்பவங்களும் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் வழி வகைகளே. இதனால் வட,கிழக்கு தாயகத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்றுமாறு இப்பேரணி வலியுறுத்துகின்றது.

தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக உள்ளகப் பொறிமுறையை நீதிக்கான தேடலில் பிரோயோசனமற்ற ஒன்று என தொடர்ந்த தேர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் செப்டம்பர் 2015 அறிக்கைமிகத் தெளிவாக இலங்கையின் நீதித்துறை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கதகமையற்றது எனக் கூறியது.

இருப்பினும் ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் இணைந்துகலப்பு பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு பொருத்தமானது என தமது செப்டம்பர் 2015 பிரேரணை மூலம் விதந்துரைத்தனர்.

இதனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது வெளி நாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது எனத் தெளிவாக அறிவித்துவிட்டது. கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீள உள்ளகப் பொறிமுறையை மட்டுமே முன்வைக்கின்றது.

இந்த சூழலில் இப்பேரணி சர்வ்தேச விசாரணைக்கான தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றது.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நிலவிவரும், பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் ஆயிரக்கணக்கானதமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களுள் சிலர் 15 – 20 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுவிசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையகத்திற்குஉறுதிமொழிகொடுத்தும் இதுவரைபயங்கரவாததடைச் சட்டம் நீக்கப்படவில்லைஎன்பதுடன் தொடர்ந்தும் பல இளைஞர்கள் அச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாழும் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனவும் இப்பேரணிவலியுறுத்துகின்றது.

போர் நிகழ்ந்த காலகட்டத்திலும், அரசியல் காரணங்களுக்காகவும் கடத்தப்பட்டும், சரணடைந்த பின்பும் காணாமல் போகச்செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் எங்கு இருக்கின்றார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என உடனடியாகக் கண்டறிந்து பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவர்களுக்கு நீதிவழங்கப்படவும் வேண்டும்.

யுத்தம் நடந்தகால கட்டங்களில் கடற்படையினரின் தடை உத்தரவு காரணமாக வடக்கு–கிழக்குமீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருந்தனர்.

ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் ஆகியநிலையில் இன்றும் கூட வடக்கு–கிழக்குமீனவர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கைமீனவர்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமின்றி வடகிழக்கு மீனவர்களின் படகுகளை சட்டவிரோதமாக கைப்பற்றுவதாலும் நிரந்தர தங்குமிடங்களைஅத்துமீறி அமைப்பதனாலும் தமிழ் மீனவர்கள் தமது சொந்தமீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படுகின்ற சூழல் உருவாகிவருகின்றது.

தென்னிலங்கை மீனவர்கள்,வடகிழக்கு கடற் பிரதேசங்களில் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை கையாள்வதால் தமிழ் மீனவர்கள் தமதுவாழ் வாதரங்களை இழந்தும் வருகின்றார்கள்.

14440665_1790964577853129_3460588055785873190_n 14440802_1790965351186385_3987615256094061052_n  14469572_1790965181186402_3718599327928283710_n 14485058_1790964831186437_8567161608209155770_n

இதன் காரணமாக ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

இந்தியமீனவர்களின் சட்டவிரோதமீன்பிடிமுறைகளாலும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அன்றாடத் தொழில் செய்துபிழைக்கும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டு மென்பதுடன், தமிழ் மீனவர்களின் கடல் வளங்கள், அத்துமீறி,சட்டத்துக்கு புறம்பாகசூறையாடப்படுவதை இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

விடுதலைக்காக போராடிய தேசிய இனங்கள் மத்தியில் அவர்களின் விடுதலை வேட்கையை அழிக்கும் பொருட்டு போதை வஸ்துக்களை இளைஞர்கள்,யுவதிகள் மத்தியில் பரப்பும் வழிமுறைகளை பல நாடுகளின் அரசுகள் கையாண்டுள்ளன.

தமிழர் தாயகத்தை ஆழமான இராணுவ கண்காணிப்புக்குள் வைத்திருக்கின்ற போதிலும் பெருமளவான போதைவஸ்துப் பொருட்கள் எமது பிரதேசங்களினுள் ஊடுருவவிடப்படுகின்றன.

கிரோயின் போன்றபோதைப் பொருட்களும்,வடகிழக்கில் வேகமாகப் பரவிவருவதுடன், வட- கிழக்கில் இராணுவத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுவிழாக்களின் போதுதமிழ் இளைஞர்களிடையே மது பாவனையை இராணுவம் நேரடியாகஊக்கப்படுத்துவதுஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்; இவை அனைத்தும் எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தைதிட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கைகளாகவே நோக்க வேண்டியுள்ளது.

இவற்றை நிறுத்தவும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகின்றது.

அரசியல் தீர்வுசம்பந்தமாக, இன்னமும் தீர்வுகாணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்சனையினதும், நடந்து முடிந்த போரினதும் – நேரடி மற்றும் நேரடியற்ற விளைவுகளான மேற் கூறப்பட்ட அரசியற் பாதகங்கள் எதுவும் மீண்டும் நிகழாதவாறு தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியற் தீர்வுமுன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த பேரணிபிர கடனம் செய்கின்றது.

தமிழர்களின் தேசியபிரச்சனைக்குதீர்வுகாணப்படும் எனும் நோக்கில் 3ஆவது குடியரசு அரசியல் யாப்பைகொண்டு வருவோம் என்று இவ் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறிவருகின்றது.

ஆனால் இலங்கை அரசின் ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வுவரும் எனவும் பௌத்தத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்தேர்ச்சியாக கூறிவருகின்றனர்.

ஒற்றை ஆட்சிக்குள் ஒரு குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வை தமிழருக்கான தீர்வாகதிணிக்க இவ்வரசாங்கம் முயற்சிக்கின்றது.

அவசரஅவசரமாக ஓர் அரசியலமைப்பை பாராளுமன்றில் நிறைவேற்றி பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றிற்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற அரசாங்கம் முயற்சிக்கப் இருக்கின்றது.

தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்கு புதிய அரசியலமைப்பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வொன்றைவழங்கிவிட்டதாக அர்த்தப்படுத்துவதே

அரசாங்கத்தின் நோக்கம்.

புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

தமிழர்கள் புதிய அரசியலமைப்பு எப்படியாக இருக்கவேண்டும் எனக் கருத்துக் கூறுவதோ, கூட்டாகநிலைப்பாடு எடுப்பதோ, அது தொடர்பில் ஜனநாயக ரீதியாக அணி திரள்வதோ அரசியலமைப்பாக்க முயற்சியை குழப்ப எடுக்கும் நடவடிக்கையாக சித்தரிப்பதை கண்டிக்கின்றோம்.

தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்குதந்தபடிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில் தமிழர்களின் கடந்த 68 ஆண்டுகால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டதீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறை சாத்தியமானதீர்வு, தமிழர்களை இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் ஒருதேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம்.

தமிழர்களின் சுயநிர்ணயஉரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவனரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம்.

தமிழர் தேசத்தின் தனித்து வத்தையோ,தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரைகுறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ளமுடியாது.

புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதியஅரசியலமைப்பு தொடர்பிலாக நடாத்தப்பட்ட பொதுமக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறம் தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயகரீதியதுமான கலந்துரையாடல் ஒன்றுமக்கள் மத்தியில் இடம் பெறபோதுமான காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அடக்கு முறையின் கீழ் அரசியல் தீர்வுதொடர்பிலான கலந்துரையாடலை நடாத்தமுடியாது.

வடக்குகிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதியஅரசியலமைப்பு தொடர்பிலானதிறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமயமாக்கல் நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE